Connect with us

வீடில்லாம கஷ்டப்பட்ட நரிக்குறவர்கள்! – இமான் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

d imman

Tamil Cinema News

வீடில்லாம கஷ்டப்பட்ட நரிக்குறவர்கள்! – இமான் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Social Media Bar

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் டி.இமான். 2000கள் தொட்டு விசில் உள்ளிட்ட பல படங்களுக்கு டி.இமான் இசையமைத்து வந்தாலும், 2012ம் ஆண்டு வெளியான கும்கி படம் டி.இமானின் இசை பயணத்தில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் இசையமைத்து வரும் இமான் சமூக ஆதரவான காரியங்களிலும் பங்காற்றி வருகிறார். இதற்காகவே தொண்டு நிறுவனம் ஒன்றையு தொடங்கி நடத்தி வருகிறார் இமான். இந்த தொண்டு நிறுவனம் மூலமாக தற்போது நெய்வேலியில் வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட 6 நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீடு கட்டி தந்துள்ளார் இமான்.

அதுமட்டுமல்லாமல் அம்மக்களுக்கு இரவுநேர பாடசாலை ஒன்றையும் அமைத்துக் கொடுத்துள்ளார். எவ்வளவு சம்பாதித்தாலும் கொடுக்க மனமில்லாதவர்கள் மத்தியில் ஏழை மக்களுக்காக இமான் செய்துள்ள இந்த உதவியை பலரும் வியந்து பாராட்டியுள்ளனர்.

To Top