Tamil Cinema News
கொலை குற்றவாளியை பாட்டு பாட வைக்க ஜெயிலுக்கே சென்ற தேவா.!
கிராமிய இசையை வெள்ளி திரைக்கு கொண்டு வந்து அதற்கு ஒரு அடையாளத்தை பெற்று தந்தவர் இசையமைப்பாளர் தேவா. அதுவரை கிராமிய பாடல்கள் மற்றும் கானா பாடல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் வெள்ளிதிரைக்கு வரவே இல்லை.
இருந்தாலும் சமூக ரீதியாக கிராமிய இசைக்கு அதிக மரியாதை இருக்கவில்லை. எனவே தேவாவை பலரும் இதனால் கேலி செய்துள்ளனர். அப்படியெல்லாம் இருந்தும் கூட மக்களுக்காக தொடர்ந்து மெலோடி, கானா என கொடுத்து கலக்கியவர் தேவா.
இந்த நிலையில் தேவா ஒரு பேட்டியில் கூறும்போது பாட்டுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதை விளக்கியிருந்தார். அதில் கூறிய தேவா இந்து என்கிற திரைப்படத்திற்கு இசை அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு பாடலை குறிப்பிட்ட ஒரு பாடகர்தான் பாட வேண்டும் என தேவா விரும்பினார்.
ஏனெனில அந்த பாடல் சென்னை தமிழில் வரக்கூடிய பாடல். அந்த பாடகர் அதை மிக எளிதாக பாட கூடியவர். எனவே அவரை தேடினார் தேவா. அந்த சமயத்தில்தான் அவர் ஜெயிலில் இருப்பது அவருக்கு தெரிந்தது. அந்த பாடகர் ஒரு கொலை குற்றத்திற்காக தூக்கு தண்டனை பெறுவதற்கு இருந்தார்.
அவரை ஜெயிலில் சென்று பார்த்தார் தேவா. அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவரை பாடுவதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் அவரது கையில் விலங்கு போட்டுதான் பாட அனுமதிப்போம் என கூறியுள்ளனர். ஆனால் தேவா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
ஒரு கலைஞன் கையை கட்டி என்னால் பாட்டு வாங்க முடியாது என கூறிய தேவா பிறகு மனோவை வைத்து அந்த பாடலை பாட வைத்துள்ளார். ஒரு நேர்க்காணலில் தேவா இந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
