Cinema History
லைட்டு ஆஃப் ஆனதால் வாய்ப்பு கிடையாது!.. இது என்ன புது உருட்டு.. ஷாக் ஆன இசைஞானி!..
Mastro Ilayaraja : தமிழ் சினிமாவில் மூடநம்பிக்கைகள் எப்போதுமே கொஞ்சம் அதிகமாகவே உண்டு. எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் அரசியல் வாதியையே கண்டு பயப்படவில்லை என்றாலும் இந்த மூட நம்பிக்கைகளுக்கு பயப்படும் திரை பிரபலங்கள் உண்டு.
முகவரி படத்தில் கூட இதை அடிப்படையாக கொண்டு ஒரு காட்சி வரும். அஜித்திற்கு ஒரு படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்து பாடல் ரெக்கார்ட் செய்யும் நேரத்தில் தயாரிப்பாளருக்கு கார் விபத்து ஏற்பட்டதால் அஜித்தை படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள். நிஜமாகவே அப்படி சினிமாவில் நடப்பாதலேயே அந்த படத்தில் அப்படி காட்சி இருந்தது.
எனவேதான் படத்திற்கு பூஜை போட்டு படத்தை துவங்குகின்றனர். பொதுவாக தமிழ் சினிமாவில் விளக்கு அணைவது என்பது பெரும் அபசகுணமாக பார்க்கப்பட்டது. இளையராஜாவிற்கு கூட திக் திக் நிமிடங்களை கொடுத்த அபசகுண சம்பவங்கள் நடந்துள்ளன.
இளையராஜா முதன் முதலாக தமிழில் இசையமைத்த திரைப்படம் அன்னக்கிளி (Annakili Movie) என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த படத்திற்கான வாய்ப்பை சினிமாவின் பெரும் வசனகர்த்தாவான பஞ்சு அருணாச்சலம்தான் (Panju Arunachalam) வாங்கி கொடுத்தார்.
முதல் நாள் தயாரிப்பாளரை சந்தித்து இளையராஜா பேசிக்கொண்டிருக்கும்போது கரண்ட் கட் ஆனது. அதனால் இளையராஜாவிற்கு பெரும் பயம் வந்துவிட்டது. ஏனெனில் சினிமாவில் இதையெல்லாம் அபசகுணமாக பார்ப்பார்கள். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் பி.தமிழரசி அதையெல்லாம் ஒரு அபசகுணமாக கருதவில்லை.
அவர் இளையராஜாவின் திறமைக்கே மதிப்பு கொடுத்தார். எனவே வாய்ப்பை பெற்ற இளையராஜா அது மூட நம்பிக்கை என உணர்த்தும் வகையில் ஹிட் பாடல்களை கொடுத்தார். இதே போன்ற சம்பவம் நடிகர் ஸ்ரீகாந்துக்கும் நடந்தது.
ரோஜாக்கூட்டம் (Roja kootam) திரைப்படத்தில் வாய்ப்பை பெற வந்த ஸ்ரீகாந்த் (Actor Srikanth) அவரது போட்டோவை இயக்குனரிடம் தரும்போது கரண்ட் கட் ஆகிவிட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாது இயக்குனர் அவரை படத்தில் சேர்த்துக்கொண்டார். அந்த படம் பெரும் ஹிட் கொடுத்தது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்