Bigg Boss Tamil
இந்த மாதிரி வார்த்தையை எப்படி விடலாம்..! முத்துக்குமாருக்கும் அருண் அப்பாவுக்கும் வந்த பிரச்சனை..!
எப்போதுமே ஓயாத ஒரு பஞ்சாயத்தாக தமிழ் மக்கள் மத்தியில் இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பஞ்சாயத்துகள் தான். ஒருவருக்கொருவர் நடக்கும் சண்டைகள் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றுகிறது.
அதனாலேயே அவர்களுக்குள் சண்டை ஏற்படுத்தும் விதமாக டாஸ்க்குகளை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் வழங்கி வருவார்கள். சிலர் மனரீதியாக பாதிக்கப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி விடுவதும் உண்டு.
போன வருடம் ஜிபி முத்து, பவா செல்லதுரை போன்றவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதால் வெளியேறினார். அந்த அளவிற்கு தொடர்ந்து டார்ச்சர்கள் என்பது பிக் பாஸில் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸில் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களின் பெற்றோர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வண்ணம் இருக்கின்றனர். அப்படியாக வந்த அருணனின் தந்தை முத்துக்குமார் குறித்து குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது மஞ்சரி அவரின் பொம்மையை தலையை திருப்பி அருண் எரிந்ததை தவறாக பேசினார். அதை ஒரு காமெடிக்காக தான் அருண் செய்தார்.
ஆனால் முத்துக்குமரன் அருண் செய்கைகள் பிடிக்காத காரணத்தினால் அருணை ஏதாவது செய்து விட்டு போகலாம் என்று நினைக்கிறேன் என்று கூறினார். அது தவறு என்று கூறியிருக்கிறார் அந்த வீடியோ இப்பொழுது பிரபலமடைய துவங்கி இருக்கிறது.