Tamil Cinema News
தர்மம் பண்ணுவதில் கர்ணனை மிஞ்சிய மிஸ்கின்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.!
தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் மிஸ்கின்.
அந்த படத்திற்கு பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து வரிசையாக ஹிட் திரைப்படங்களாக கொடுத்து வந்தார் மிஸ்கின். இதற்கு நடுவே திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார்.
அவரது நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சவரக்கத்தி திரைப்படத்திலேயே அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் தற்சமயம் இவர் டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அந்த படத்தில் நடித்தப்போது நடந்த அனுபவம் குறித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “மிஸ்கின் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பேசுவதை நான் விரும்பி கேட்பேன். தினசரி படக்குழுவில் யாருக்காவது ஏதாவது பரிசு ஒன்றை கொடுத்துக்கொண்டே இருப்பார்.
ஒரு நாள் அங்கு பணிப்புரிந்த லைட் மேனுக்கு பிறந்தநாள் இருந்தது. அவரை அழைத்த மிஸ்கின் கையை பார்த்தார். உடனே என்ன நினைத்தாரோ கையில் இருக்கும் வாட்சை கழட்டி அவருக்கு பரிசாக கொடுத்தார். அப்படி ஒரு குணம் மிஸ்கின் சாருக்கு என கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
