பிணம் அறுப்பவர் எனக்கு சொல்லி கொடுத்த போதனை.. மிஸ்கினுக்கு அதிர்ச்சி கொடுத்த மனிதர்.!
தமிழ் சினிமாவில் உள்ள தனித்துவமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படங்கள் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமாக இருப்பதை பார்க்க முடியும்.
இந்த நிலையில் தன்னுடைய பழக்கவழக்கங்கள் குறித்து மிஸ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நான் பெரும்பாலும் இரவு நேரங்களில் தூங்குவது கிடையாது. ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் இருக்கின்றன.
ஆனால் எனக்கு 40 மணி நேரங்கள் தேவைப்படுகிறது. அந்த அளவிற்கு எனக்கு வேலைகள் இருக்கின்றன. முன்பெல்லாம் 5 மணி நேரமாவது தூங்கிக் கொண்டிருப்பேன் இப்பொழுது எல்லாம் இரண்டு மணி நேரங்கள் தான் நான் தூங்குகிறேன்.
என்று கூறிய மிஷ்கின் இந்த விஷயத்தை நான் வேறு ஒரு நபரிடம் கற்றுக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார். திரைப்படத்தில் பிணம் அறுக்கும் காட்சி ஒன்றை வைப்பதற்காக நிஜமாகவே பிணம் அறுக்கும் நபர் ஒருவரை போய் சந்தித்தேன்.
அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வு செய்யும் அந்த நபர் எப்போது ஓய்வெடுப்பார் என்று நான் கேட்டேன். அப்பொழுது அவர் நாங்கள் ஓய்வே எடுக்க மாட்டோம் என்று கூறினார். ஒரு நாளைக்கு 40 லிருந்து 50 பிணங்கள் வந்த வண்ணம் இருக்கும்.
அவற்றை ஆய்வு செய்து மருத்துவர் அறிக்கை கொடுக்க வேண்டும் எனவே ஒரு நாளைக்கு நான்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம்தான் உறங்குவோம் என்று கூறியிருக்கிறார் அந்த நபர். இதனை பகிர்ந்த மிஷ்கின் எனக்கு ஒரு வாழ்க்கை பாடத்தை அவர் கற்றுக் கொடுத்தார் என்று கூற வேண்டும் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார்.