Tamil Cinema News
கஞ்# அடிச்ச மாதிரி வந்தான்… நடிகரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிய மிஸ்கின்.!
இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். பெரும்பாலும் மிஸ்கின் இயக்கும் திரைப்படங்கள் வித்தியாசமானதாகதான் இருக்கின்றன. அதே சமயம் மிஸ்கின் மேடையில் பேசும் விஷயங்கள் அதிக வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் பாட்டல் ராதா திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்த மிஸ்கின் அங்கு பேசிய விஷயங்கள் கூட அதிக வைரலாகி வந்தது. இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய மிஸ்கின் அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்த நிலையில் இதே போல இன்னொரு நேர்க்காணலில் இவர் பேசிய வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் பேசிய மிஸ்கின் கூறும்போது நடிகர் கலையரசன் குறித்து பேசியிருந்தார்.
அப்போது பேசிய மிஸ்கின் முதன் முதலாக என்னிடம் வந்த கலையரசன் ஏதோ கஞ்சா அடிச்சா மாதிரி இருந்தான். அவனை நடிக்க வச்சேன். இப்ப ரொம்ப சீக்கிரமா வளர்ந்து வந்துட்டான். ரொம்ப நல்லா நடிக்கிறான் என அவரை புகழ்ந்து இருந்தார் மிஸ்கின்.
ஆனாலும் கஞ்சா அடிச்சவன் மாதிரி வந்தான் என கூறும்போது கலையரசன் சற்று முகம் சுளிக்கவே செய்தார். அந்த வீடியோ இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
