அஜித் விஜய்யை வச்சி படம் பண்றவன் இல்லை நான்!.. லோகேஷ் கனகராஜைதான் சொல்றார் போல!. மிஸ்கின் பேட்டி!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக அறிமுகமான மிஸ்கின் தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார்.
முதல் படம் அந்த அளவிற்கு வெற்றியை தரவில்லை என்றாலும் கூட அதனை தொடர்ந்து வந்த அடுத்தடுத்த படங்கள் அவருக்கு நல்ல படங்களாக அமைந்தன. வெகு நாட்களாக இயக்குனராக இருந்த மிஷ்கின் பிறகு நடிப்பிலும் ஆர்வம் காட்டத் துவங்கினார்.
அதனைத் தொடர்ந்து தற்சமயம் நடிகராக அவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளன. ஏற்கனவே மாவீரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்ததை அடுத்து தற்சமயம் லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒரு பேட்டியில் திரைப்படம் இயக்குவது குறித்து இவர் பேசும்பொழுது விஜய் அஜித் மாதிரியான நடிகர்களை வைத்து ஏன் படம் இயக்கியது இல்லை என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறும் பொழுது சினிமாவிற்கு வர வேண்டுமென்று எனக்கு பெரிய ஆசை எல்லாம் கிடையாது ஒரு வருமானம் கிடைக்கிறதே என்றுதான் சினிமாவிற்கு வந்தேன்.
அதேபோல திரைப்படம் இயக்குவதிலும் நிறைய காசு சம்பாதித்து பெரிதாக வாழ வேண்டும் பெரும் புகழை அடைய வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை கிடையாது. விஜய் அஜித் போன்ற நடிகர்களை வைத்து படம் எடுக்கலாம் ஆனால் அதில் நமக்கு பெரிய சுதந்திரம் இருக்காது. சின்ன கதாநாயகர்களை வைத்து எடுக்கும் திரைப்படங்களில் அதிக சுதந்திரம் இருக்கும். என கூறியுள்ளார்.
எனவே இவர் லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்கள் அதிக சுதந்திரமின்றி படங்கள் எடுப்பதாக கூறுகிறாரா? மிஸ்கின் என இதுக்குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்!.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்