பிரதீப் ரங்கநாதன் தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிலையில் அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.
அதில் ஒன்று டிராகன் மற்றொன்று எல்.ஐ.கே. டிராகன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்தது. அதில் மிஸ்கின் பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியிருந்தார். ஏனெனில் டிராகன் திரைப்படத்தில் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதில் மிஸ்கின் கூறும்போது சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்களில் நல்ல கதாநாயகனாக நான் பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன். பெரும்பாலும் சில படங்களில் வெற்றி கொடுத்துவிட்டாலே ஒரு தலைகணம் வந்துவிடும்.

சிலர் அவர்களது உயரத்தில் இருந்து 2 அடி கூடிவிட்டதாக நினைப்பார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே மிக மரியாதையுடன் இயக்குனர் கூறுவது போல நடிப்பவர்களாக இருப்பார்கள். அப்படியான நடிகர்களில் பிரதீப் ரங்கநாதனும் ஒருவன்.
ப்ரதீப்புக்கு எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் நிறைய ரசிகர்கள் வந்தார்கள் என்று நான் யோசித்துக்கொண்டே இருப்பேன். அவனுடன் நடிக்கும்போதுதான் அது தெரிந்தது. என்னுடைய உதவி இயக்குனர்கள் என்னிடம் பேசும்போது பிரதீப் என்ன அவ்வளவு பெரிய வெங்காயமா? என கேட்பார்கள்.
நான் அவர்களிடம் ஆமாண்டா அவன் அவ்வளவு பெரிய வெங்காயம்தான் என கூறியுள்ளேன் என தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார் மிஸ்கின்.