Connect with us

700 படத்துல நடிச்சிருக்கேன்!.. ஆனா அந்த ஒரு படம் அதுல வேற லெவல்!.. ஓப்பன் டாக் கொடுத்த நாசர்!.

nassar

Cinema History

700 படத்துல நடிச்சிருக்கேன்!.. ஆனா அந்த ஒரு படம் அதுல வேற லெவல்!.. ஓப்பன் டாக் கொடுத்த நாசர்!.

Social Media Bar

Actor Nassar : தமிழ் சினிமாவில் பல விதமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாசர். காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, சீரியஸான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை சிறப்பாக நடித்து காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நாசர்.

நாடகங்களில் நடித்து வந்த காரணத்தினால் எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை நடிகர் நாசரால் சிறப்பாக நடிக்க முடியும். இவரது திறமையை கண்டுதான் கமல்ஹாசன் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் நாசருக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார்.

ஆரம்பத்தில் சினிமாவில் நாசர் வில்லன் கதாபாத்திரத்தில்தான் நடித்து வந்தார். ஆனால் போக போக அவருக்கு அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகாள் கிடைத்தன. ஒரு பேட்டியில் அவர் கூறும்போது 700க்கும் அதிகமான படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.

ஆனால் எனது மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம் என்றால் அது எம்மகன் படத்தில் வரும் தந்தை கதாபாத்திரம்தான். மற்ற படங்களில் நான் நடிக்கும்போது என்னை தொடர்புக்கொள்ளும் ரசிகர்கள் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்றுதான் கூறுவார்கள்.

ஆனால் எம்மகன் திரைப்படத்தில் நடித்தப்பிறகு என்னை தொடர்புக்கொண்டவர்கள் அவர்களுக்கு அவர்கள் தந்தையை நான் நினைவுப்படுத்தியிருப்பதாக கூறினார்கள். இது நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டை விட பெரிய விஷயமாக பார்க்கிறேன்.

இதற்கு முழுக்க முழுக்க அந்த படத்தின் இயக்குனரே காரணம். அவர்தான் இந்த கதாபாத்திரம் இப்படி அமைய வேண்டும் என வடிவமைத்தவர். இவ்வாறு கூறியுள்ளார் நடிகர் நாசர்.

To Top