கை செலவுக்கு கூட காசு இல்லாமல் என்னை இழுத்துக்கிட்டு ஓடுனாறு!.. நளினியால் ராமராஜனுக்கு வந்த கஷ்டம்!..
தமிழ் சினிமாவில் உள்ள குடும்பங்கள் கொண்டாடும் கதாநாயகர்கள் வரிசையில் முக்கியமானவர் நடிகர் ராமராஜன். எம்.ஜி.ஆர் க்கு பிறகு அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும் குடும்பங்கள் கொண்டாடும் கதாநாயகனாகவும் இருந்தவர் ராமராஜன்.
உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் இருந்து அதன் பிறகு கதாநாயகனாக மாறி அப்போதைய காலகட்டத்தில் ரஜினி கமல்ஹாசனுக்கே போட்டியாக வந்து நின்றவர் ராமராஜன். இவர் இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்தபோது நடிகை நளினியை காதலித்து வந்தார்.
அப்போது ராமராஜனிடம் பெரிதாக பணமோ புகழோ இல்லாத காரணத்தினால் அவருக்கு பெண் தர மறுத்துவிட்டனர் நளினிவீட்டார் ஆனால் நளினி ராமராஜனை மிகவும் காதலித்ததால் அவருடன் வீட்டை விட்டு ஓடிச் செல்ல முடிவெடுத்தார். அந்த சமயத்தில் ராமராஜனிடம் சுத்தமாக பணமும் இல்லை, இருந்தாலும் நம்பி வந்த பெண்ணை விடக்கூடாது என்பதற்காக நளினியை அழைத்துச் சென்றார்.
அடுத்த ஒரு மாதத்திற்கு குடும்பத்தாருடன் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று சென்னையை விட்டு வெளியில் இருந்தனர் இந்த ஜோடிகள். அந்த சமயத்தில் சுத்தமாக காசு இல்லாத ராமராஜன் மிகவும் கஷ்டப்பட்டு சமாளித்துள்ளார். ஆனால் இது எதுவும் தெரியாத நளினி அவரிடம் ஏசி ரூமில் தான் தங்குவேன் என்கிற கணக்கில் பேசியுள்ளார். அதன் பிறகு பல நாள் கழித்தே அந்த சமயத்தில் காசு இல்லாமல் கஷ்டப்பட்ட விஷயத்தை கூறியுள்ளார் ராமராஜன்.
இந்த நிகழ்வை நடிகை நளினி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.