ரோட்டுல சிகரெட் அடிச்சிட்டு போறவரு கத்து தந்தாரு! –  மாஸ் சீனில் இருந்த ரகசியத்தை உடைத்த நானி!

தமிழில் பிரபலமாகி வரும் தெலுங்கு நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நானி. அவர் நடித்த நான் ஈ, ஜெர்சி, ஷியாம் சிங்கா ராய் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றன.

தற்சமயம் நானி தசரா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது. தசரா திரைப்படம் கிட்டத்தட்ட புஷ்பா படத்தை போன்றே இருப்பதாக கூறப்படுகிறது.

Social Media Bar

இந்த படத்தில் கதாநாயகன் சிகரெட்டை கெத்தாக பற்ற வைக்கும் காட்சி ஒன்று உள்ளது. அதுக்குறித்து நானி கூறும்போது அந்த படத்தின் படப்பிடிப்பானது ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் உள்ள ஒரு நபர் எப்போதும் ஸ்டைலாக சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு சுற்றியுள்ளார். அதை பார்த்த இயக்குனர் அவரை அழைத்து ஹீரோவுக்கும் அதே போல சிகரெட் பற்ற வைக்க கற்று தரும்படி கேட்டுள்ளார்.

அந்த நபரும் நானிக்கு எப்படி பற்ற வைப்பது என கற்று தந்துள்ளார். அப்படிதான் அந்த காட்சி படத்தில் வைக்கப்பட்டுள்ளது.