Connect with us

நெருக்கமான படுக்கை காட்சிக்கு தயாரான நயன்தாரா.. மீண்டும் பழைய பாணியை கையில் எடுக்கிறார் போல..

nayanthara

News

நெருக்கமான படுக்கை காட்சிக்கு தயாரான நயன்தாரா.. மீண்டும் பழைய பாணியை கையில் எடுக்கிறார் போல..

Social Media Bar

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஹிந்தியில் இவர் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் நயன்தாராவிற்கு ஒரு மார்க்கெட் கிடைக்க துவங்கியது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்காமல் தொடர்ந்து அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் நயன்தாரா.  இதனை தொடர்ந்து பாலிவுட்டிலும் தற்சமயம் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் நயன்தாரா.

பாலிவுட் சினிமா:

பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை தமிழ் சினிமாவை போல் இங்கு கிடையாது. பாலிவுட் சினிமாவில் என்னதான் கொட்டி கொட்டி நடிப்பை வெளிப்படுத்தினாலும் கூட கவர்ச்சிக்கு இருக்கும் மதிப்பு அங்கு நடிப்புக்கு இருக்காது.

அதனால் எந்த ஒரு நடிகையாக இருந்தாலும் கவர்ச்சி காட்டினால்தான் பாலிவுட் சினிமாவில் பிழைக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக பாலிவுட் சினிமா அதற்காகவே பழகிவிட்ட காரணத்தினால் அங்கு சென்று நடிப்பவர்களுக்கும் வேறு வழியில்லாமல் இருக்கிறது.

இந்த நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இந்தியாவில் இருக்கும் பெரிய நட்சத்திரங்களை வைத்து ஒரு சீரிஸ் ஒன்றை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.

பேன் இந்தியா சீரிஸ்:

இதில் அமீர்கான் விஜய் சேதுபதி மாதிரியான பல பெறும் பிரபலங்கள் நடிக்கின்றனர். இதில் பிரபலமாக இருக்கும் நடிகைகளையும் இந்த சீரியஸில் நடிக்க வைக்க இருக்கின்றனர்.

அந்த வகையில் தமிழிலும் பாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கும் நடிகை நயன்தாராவும் அதில் நடிக்க இருக்கிறார். மேலும் சமீபத்தில் அவர் நடித்த வெளியான அன்னபூரணி திரைப்படம் பாலிவுட்டில் அதிக சர்ச்சை ஏற்படுத்தியது.

nayanthara
nayanthara

அதை துடைக்கும் விதமாக இந்த சீரியஸில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த சீரியஸில் இவருக்கு மிகவும் நெருக்கமான படுக்கை அறை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா தமிழிலேயே அதிகமாக கவர்ச்சியாக நடிப்பதை விட்டுவிட்டார் இப்பொழுது பாலிவுட்டில் எப்படி நடிக்க போகிறார் என பார்க்கும் பொழுது அதற்கு நயன்தாரா ஒப்பு கொண்டு விட்டார் என்று கூறப்படுகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது.

To Top