Connect with us

12 கோடி சம்பளம் கொடுத்து ஒரு கோடி கூட கிடைக்கலை!.. அன்னப்பூரணி படத்தால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்!..

annapoorani

News

12 கோடி சம்பளம் கொடுத்து ஒரு கோடி கூட கிடைக்கலை!.. அன்னப்பூரணி படத்தால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்!..

Social Media Bar

Nayanthara annapoorani : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா வில்லு, ஏகன் மாதிரியான திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நயன்தாராவிற்கு பெரிதாக மார்க்கெட் இல்லை என்று கூறலாம்.

ஆனால் தொடர்ந்து நானும் ரவுடிதான் போன்ற திரைப்படங்களில் நடிக்க துவங்கிய பொழுது நயன்தாராவின் மார்க்கெட் அதிகரிக்க துவங்கியது. அதனை தொடர்ந்து தற்சமயம் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருக்கிறார்.

இந்த நிலையில் நயன்தாரா அதிகமாக சம்பளம் வாங்குவது ஒரு பிரச்சனையாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் முன்பு இருந்த அளவிற்கு நயன்தாராவிற்கு தமிழ் சினிமாவில் தற்சமயம் மார்க்கெட் இல்லை என்று பேச்சுக்கள் இருக்கின்றன .

தற்கு தகுந்தார் போல சில நாட்களுக்கு முன்பு வெளியான அன்னபூரணி என்கிற நயன்தாரா திரைப்படம் பெரும் தோல்வியை கண்டுள்ளது. இந்த திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க பங்கு மட்டும் 85 லட்சத்திற்கு தான் விற்றதாம்.

இந்த படத்திற்காக நயன்தாராவிற்கு கொடுக்கப்பட்ட சம்பளமே 12 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு செலவுகளை சேர்த்தால் ஒரு 20 கோடியாவது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பணத்தை எப்படி எடுக்க போகிறார்கள் என தெரியவில்லை ஆனால் தொடர்ந்து நயன்தாராவிற்கு இந்த சம்பளம் கொடுக்கப்படுமா என்பது இனி கேள்விக்குறி தான்!..

To Top