தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் இருக்கிறதோ அதுபோல தமிழில் நடிக்கும் ஒரு சில நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் நடிகை என்றால் அது நயன்தாரா.
இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருவதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். மேலும் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார். தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் நன்கு அறியப்படும் நடிகையாக இருந்து வருகிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்யத நிலையில் தற்போது 2 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இந்நிலையில் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தைப் பற்றிய பேச்சுக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஜா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்
குரங்கு பொம்மை என்ற படத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன். இவர் சமீபத்தில் விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நட்டி, சிங்கம்புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனீஸ் காந்த், அனுராக் காஷ்யப், வினோத் சாகர் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

வித்தியாசமான கதையை கொண்ட படமாக அமைந்த நிலையில் இது உலகம் முழுவதும் வெளியாகி 100 கோடியை வசூலித்தது. பலருக்கும் அவர்களுடைய 50-வது படம் சரியாக அமையாத நிலையில் விஜய் சேதுபதிக்கு இந்த திரைப்படம் வெற்றியை கொடுத்தது.
மேலும் நெட்ப்ளிக்ஸில் தமிழை தவிர மற்ற மொழிகளில் வெளியாகி மக்கள் அதிகம் பார்த்த படங்களில் ஐந்தாவது இடத்தை பிடித்திருந்தது.
மகாராணியாக மாறும் நயன்தாரா
நயன்தாரா அடுத்தடுத்து படங்கள் கைவசம் வைத்திருக்கும் நிலையில், தற்பொழுது இவரின் அடுத்த படத்தை பற்றி அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. மகாராஜா படத்தை தொடர்ந்து இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு மகாராணி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






