Tamil Cinema News
ஒரு நடிகரை பழிவாங்க நயன்தாரா போட்ட ஸ்கெட்ச்… இப்போ எங்க வந்து நிக்குது பாருங்க.!
தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா, ஐயா மற்றும் சந்திரமுகி திரைப்படம் மூலமாக நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றார். அதற்கு பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் நடிகை நயன்தாரா.
அஜித், விஜய் என அப்போது பிரபலமாக இருந்த அனைவருடனும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போது நயன் தாராவுக்கு என்று தனி மார்க்கெட் தமிழ் சினிமாவில் உருவாகிவிட்டது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக வருகின்றன. அதே போல தமிழ் நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன் தாரா இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான் நயன் தாராவுக்கு பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் அமைந்தது. இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி அவரே நடித்திருந்தார்.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை பொறுத்தவரை அந்த திரைப்படத்தை பி.கே என்கிற பாலிவுட் திரைப்படத்தின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகதான் ஆர்.ஜே பாலாஜி இயக்கினார். இந்த திரைப்படத்தில் போலி சாமியார்களுக்கு எதிரான பல விஷயங்களை மக்களுக்கு ஏற்புடைய விதத்தில் பேசியிருந்தார் ஆர்.ஜே பாலாஜி.
இந்த நிலையில் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜியே தயாரித்து இயக்க நினைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு நயன் தாரா கேட்ட சம்பளம் கட்டுப்படியாகவில்லை. எனவே ஆர்.ஜே பாலாஜி அந்த படத்திற்கு வேறு கதாநாயகியை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு மாசாணி என பெயர் வைத்தார் ஆர்.ஜே பாலாஜி.
இதனால் கோபம் கொண்ட நடிகை நயன் தாரா வேல்ஸ் நிறுவனத்திடம் மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து படத்தின் இயக்குனரை கூட தேர்ந்தெடுக்காமல் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வெளியானது.
இதனை தொடர்ந்து அடுத்து இந்த படத்தை இயக்குவதற்கு இயக்குனர் சுந்தர் சி ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தயாராகிறது. ஆர்.ஜே பாலாஜிக்கு எதிராக இப்படி ஒரு திட்டத்தை நயன் தாரா செய்ய வேண்டுமா என ஒரு பக்கம் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன.
ஆனால் இதுக்குறித்து இரு தரப்பில் இருந்தும் எந்த ஒரு பதிலோ குற்றச்சாட்டோ வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
