Tamil Cinema News
பொம்பளை விஷயத்தில் ரொம்ப மோசம்.. சொந்த பொண்ணுனு கூட பார்க்காமல்… தந்தை குறித்த ரகசியத்தை கூறிய நடிகை சோனா
தமிழ் சினிமாவில் எல்லா நடிகைகளுக்கும் எடுத்த உடனேயே நல்ல நல்ல படங்களாக கிடைத்து பிரபலமாகிவிடுவதில்லை. இப்போதாவது சமூக வலைத்தளங்கள் இருக்கும் காரணத்தினால் சில நடிகைகள் எல்லாம் முதல் படத்திலேயே அதிக பிரபலமடைந்துவிடுகின்றனர்.
தற்சமயம் டிராகன் திரைப்படத்தில் நடித்த நடிகை கயடு லோகர் கூட அப்படி பிரபலமானவர்தான். ஆனால் முன்பு தமிழ் சினிமா அப்படி இல்லை. இதனால் பல படங்களில் நடித்தும் பிரபலமாகாமல் இருந்து வரும் நடிகைகளும் உண்டு. அப்படியான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சோனா.
2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு ஷாஜஹான், சிவப்பாதிகாரம் என பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனாலும் கூட கதாநாயகி ஆகும் அளவிற்கு இவருக்கு கடைசி வரை பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஆனாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் நடிகை சோனா. சமீபத்தில் அவரது சொந்த வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை குறித்து அவர் பேசியிருந்தது. அதிக வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் பேசிய சோனா கூறும்போது நான் சிறு வயதாக இருக்கும்போதே மிக அழகாக இருப்பேன். அதனாலேயே என்னை வெளி உலகமே தெரியாமல்தான் வளர்த்து வந்தார்கள். என் தந்தை மிக மோசமானவராக இருந்தார். அவர் பொம்பளைகள் விஷயத்தில் ரொம்ப மோசம்.
என் அம்மா அவரால் மிகவும் கஷ்டப்பட்டார். நான் சிறுமியாக இருக்கும்போது ஏதாவது விழாவிற்கு சென்றால் நான் யார் கூடவாவது தவறான உறவுக்கு செல்வேன் என என் தந்தை நினைத்தார். ஏனெனில் பெண்கள் என்றாலே உறவு வைத்து கொள்ளதான் என்பதுதான் என் தந்தையின் எண்ணமாக இருந்தது.
சிறு வயதில் இதை எல்லாம் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் வளர்ந்த பிறகு என் தந்தை வழி சொந்தங்கள் கூட அம்மாவுக்குதான் சப்போர்ட் செய்தார்கள். அப்போதுதான் என் அப்பா பக்கம்தான் தவறு உள்ளது என்பதை நான் புரிந்துக்கொண்டேன் என கூறியுள்ளார் சோனா.
