Connect with us

நைட்ல அதை வச்சிக்கலாம்.. இயக்குனருக்கு நயன்தாரா போட்ட ரூல்ஸ்.. உண்மையை உடைத்த பிரபலம்..!

Tamil Cinema News

நைட்ல அதை வச்சிக்கலாம்.. இயக்குனருக்கு நயன்தாரா போட்ட ரூல்ஸ்.. உண்மையை உடைத்த பிரபலம்..!

Social Media Bar

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு பிரபலமாக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். நடிகை நயன்தாரா சமீபத்தில் தனுசுடன் பிரச்சனை செய்ததை அடுத்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் ஒரு பத்திரிக்கை பேட்டிகயில் அவர் பேசும் பொழுது பிரபல பத்திரிகையாளர் மூவரை விமர்சனம் செய்து நிறைய பேசியிருந்தார் இந்த நிலையில் அதில் ஒருவரான அந்தணன் நயன்தாரா குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அவர் கூறும் பொழுது உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாரா பற்றிய தகவலை என்னிடம் கூறினார். இறைவன் என்கிற படம் சமீபத்தில் வெளியானது பலருக்குமே தெரிந்திருக்கும். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதில் நயன்தாராதான் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இதில் நடிப்பதற்கு நிறைய விதிமுறைகளை போட்டிருக்கிறார் நயன்தாரா படத்தை துவங்கும் பொழுது நயன்தாராவிற்கு சம்பளம் எட்டு கோடி ரூபாய் என்றும் அவரது உதவியாளருக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் என்றும் பேசப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்புக்கு வந்த நயன்தாரா பிறகு இயக்குனரை அழைத்து அதற்கு பிறகு காலை கால் சீட்டுக்கு வர முடியாது என்றும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கால் சீட்டை வைத்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறார்.

ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் காலை நேரத்தில் எடுக்கப்படும் காட்சிகளாக இருந்தது. எனவே அதனை மாற்ற முடியாது என்று இயக்குனர் கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட நயன்தாரா என்னுடைய சினிமா அனுபவம் என உனது சினிமா அனுபவம் என்ன? என்று அந்த இயக்குனரிடம் சண்டை போட்டுவிட்டார்.

வேறு வழி இன்றி இயக்குனரும் நயன்தாரா கூறியது போலவே படபிடிப்பை நடத்தி இருக்கிறார் கடைசி நாளில் பட குழுவுடன் போட்டோ எடுப்பதற்கு நயன்தாரா ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அப்பொழுது இயக்குனர் வர மறுத்திருக்கிறார் இந்த சம்பவத்தை அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் அந்தணன்.

Bigg Boss Update

To Top