என் திரைப்படத்துக்கு நான்தான் இயக்குனர்.. நயன்தாரா முடிவால் அதிருப்தியில் இருக்கும் இயக்குனர்கள்..!
நயன்தாரா பெரிய நடிகை ஆனது முதலே தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு நிறைய விதிமுறைகளை வைத்து வருகிறார். ஏற்கனவே நயன்தாரா அவர் நடிக்கும் திரைப்படங்களில் படத்தின் ப்ரமோஷனுக்கு வரமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அதை பலருமே பார்க்க முடியும். இதற்கு முன்பு நான் நடித்த எந்த ஒரு திரைப்படத்திற்குமே அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அல்லது youtube ப்ரோமோஷன் போன்ற விஷயங்களில் நயன்தாரா கலந்து கொள்வதை பார்க்க முடியாது.
நயன்தாராவை விட பெரிய நடிகர்களான சிவகார்த்திகேயன் மாதிரியான நடிகர்கள் கூட பிரமோஷன் செய்யும் போது நயன்தாரா அது முடியாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் புதிதாக இப்பொழுது ஒரு விதிமுறையை சேர்த்து இருக்கிறாரா நயன்தாரா.
நயன்தாரா விதிமுறை:

அதாவது ஒவ்வொரு முறை காட்சி எடுக்கப்பட்ட பிறகும் அது சரியாக இருக்கிறதா? என்பதை பார்ப்பதற்காக ஒரு ஸ்கிரீன் வைக்கப்படும். இந்நிலையில் நயன்தாரா தனக்கு தனியாக ஒரு ஸ்கிரீன் வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம்.
அதை தன்னுடைய உதவியாளர்களும் மேக்கப் மேணும் பார்த்துவிட்டு சரியாக இருக்கிறது என்று கூறினால் தான் அடுத்த காட்சியில் நடிப்பார் நயன்தாரா. இயக்குனர் காட்சி நன்றாக இருக்கிறது என்று கூறி நயன்தாரா உடைய உதவியாளர்கள் சரியில்லை என்று கூறினால் அந்த காட்சியை மீண்டும் படமாக்க வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது தயாரிப்பாளர்களுக்குதான் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தற்சமயம் இயக்குனர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.