Connect with us

கணவனுக்காக கட்டபஞ்சாயத்தில் இறங்கிய நயன்.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்..!

nayan

Tamil Cinema News

கணவனுக்காக கட்டபஞ்சாயத்தில் இறங்கிய நயன்.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்..!

Social Media Bar

சமீபகாலமாக தொடர்ந்து நடிகை நயன்தாரா குறித்து சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு பேச்சு என்பது சென்று கொண்டுதான் இருக்கிறது.

எப்போது நடிகர் தனுஷுக்கு எதிராக நயன்தாரா அறிக்கையை வெளியிட்டாரோ அப்பொழுதிலிருந்து நயன்தாரா முக்கியமாக பேசப்படும் நடிகையாக மாற்றினார். மேலும் சினிமா துறையை பொறுத்தவரை நயன்தாரா நடவடிக்கைகள் தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் இப்பொழுது தனது கணவருக்காக சில விஷயங்களை நயன்தாரா செய்திருப்பதாக கூறப்படுகிறது. அது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்சமயம் உருவாகிய திரைப்படம் எல்.ஐ.கே.

இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசிக்கு முடிந்து விட்டன. இன்னும் கால்வாசி படப்பிடிப்புகள் இருக்கின்றன இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நயன்தாரா செய்த விஷயம்:

இந்த நிறுவனம்தான் அடுத்து நயன்தாராவும் கவினும் சேர்ந்து நடிக்கும் திரைப்படத்தின் தயாரிக்க இருக்கின்றனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் கொடுக்கப்பட்ட பட்ஜெட்க்கு அதிகமாக செலவு செய்து எல்.ஐ.கே திரைப்படத்தை எடுத்து வருவதால் இனிமேல் இந்த படத்திற்கு செலவு செய்ய முடியாது எங்களிடம் காசு இல்லை என்று கூறிவிட்டனர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்.

nayanthara

nayanthara

இதற்கு நடுவே அடுத்து நயன்தாராவை வைத்து இயக்க இருக்கும் திரைப்படத்திற்கு நயன்தாராவிடம் கால் ஷீட் கேட்டு இருக்கின்றனர் அதற்கு பதில் அளித்த நயன்தாரா உங்களிடம்தான் காசு இல்லை என்று கூறினீர்களே?

முதலில் காசு தயார் செய்து எல்.ஐ.கே திரைப்படத்தை முடியுங்கள் அதற்கு பிறகு இந்த படத்தை துவங்கலாம் என்று கூறியிருக்கிறார் இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி இருக்கின்றனர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்.

படத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்திருக்கிறார் விக்னேஸ் சிவன். எனவே எங்களால் இணை தயாரிப்பு செலவுகளை பார்க்க முடியாது. நீங்கள் ஒரு தயாரிப்பாளர் தானே நீங்கள் அந்த செலவுகளை செய்யுங்கள் என்று அவர்கள் நயன்தாராவிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன.

To Top