அடுத்து கவினுடன் கமிட்டாகும் நயன்தாரா!.. இவங்ககிட்ட இருந்து மற்ற நடிகைகள் கத்துக்கணும்!.

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கவின் இருந்து வருகிறார். பெரும்பாலும் கவின் நடிக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அவரும் நல்ல வகையான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வருகிறார்.

லிஃப்ட் திரைப்படம் அவருக்கு முதல் படமாக இருந்தாலும் கூட டாடா திரைப்படம்தான் கவினை ஒரு நடிகராக அனைவர் முன்பும் பிரபலப்படுத்தியது. கவின் வாழ்க்கையில் டாடா முக்கியமான திரைப்படம் என கூறலாம்.

அதனை தொடர்ந்து தற்சமயம் அவர் நடித்த ஸ்டார் திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்து இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பக்கர் என்னும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் கவின். வரிசையாக கவினுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

nayanthara
nayanthara
Social Media Bar

இந்த நிலையில் நெல்சன் படத்திற்கு அடுத்து கவின் நடிக்க போகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக பெரிய நடிகைகள் சிறிய நடிகர்களுடன் நடிக்க மாட்டார்கள். ஆனால் நயன் தாராவை பொறுத்தவரை நல்ல கதை உள்ள படமாக இருந்தால் அதில் நடிக்க தயாராக இருக்கிறார்.

மேலும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும்போது அந்த நடிகைகள் வயதானவர்களாக தெரியமாட்டார்கள் என்னும் ஒரு காரணத்திற்காகவும் அவர் இளம் நடிகர்களுடன் நடிக்கிறார் என கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இது ஒரு நல்ல காம்போவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.