Connect with us

திருமணமான புதிதில் என் புருசனை பார்க்கவே பயமா இருக்கும்!.. நஸ்ரியாவுக்கு திகில் காட்டிய ஃபகத்..

News

திருமணமான புதிதில் என் புருசனை பார்க்கவே பயமா இருக்கும்!.. நஸ்ரியாவுக்கு திகில் காட்டிய ஃபகத்..

Social Media Bar

மலையாள சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று பலராலும் புகழப்படுபவர் நடிகர் பகத் பாசில். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து தற்சமயம் தமிழ் சினிமாவிலும் அவருக்கு இன்று பெரும் ரசிக்கப்பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

பகத் ஃபாசிலின் தனிப்பட்ட சிறப்பு என்ன என்று பார்க்கும் பொழுது ஒவ்வொரு திரைப்படத்திலும் அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்த மாதிரி சிறப்பான நடிப்பை அவரால் வெளிப்படுத்த முடிகிறது.

பொதுவாக நடிக்கும் நடிகர்கள் ஒரே மாதிரியான நடிப்பைதான் அனைத்து திரைப்படங்களிலும் வெளிப்படுத்துவதை பார்க்க முடியும். ஆனால் பகத் ஃபாசில் ஒவ்வொரு திரைப்படத்தின் கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற மாதிரியும் மாற்றத்தை செய்கிறார்.

பயமுறுத்திய கணவர்:

ஆனால் அதற்காக அவர் நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. இது குறித்து நடிகை நஸ்ரியா அவர் பேட்டியில் கூறி இருக்கிறார் திருமணமான புதிதில் இந்த மாதிரியான விஷயத்தால் அதிக பிரச்சனைக்கு உள்ளானதாக அவர் கூறுகிறார்.

பகத் ஃபாசில் ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கி விட்டால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து கொண்டிருப்பாராம். வீட்டில் கூட அந்த மாதிரி தன் நடந்து கொள்வாராம். அதிகபட்சம் நெகடிவ் கதாபாத்திரங்களில் நடிக்கும் பொழுது வீட்டில் அவர் செய்யும் செய்கைகள் எல்லாம் பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று கூறுகிறார் நஸ்ரியா.

திருமணமான புதிதில் இது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும் இப்பொழுது அதெல்லாம் பழகிவிட்டது என்கிறார் நஸ்ரியா.

To Top