Hollywood Cinema news
தீர்க்கப்படாத மர்மங்கள் – உண்மை மர்மங்களை கண்டறியும் புது சீரிஸ்
திரைப்படங்களில் கூட த்ரில்லர், க்ரைம், ஹாரர் திரைப்படங்கள்தான் அனைவருக்கும் பிடிக்கிறது. ஏனெனில் அவை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் திரைப்படத்தில் நடப்பது போன்ற விஷயங்கள் நம் சொந்த வாழ்க்கையில் நிகழும்போது நம் மனநிலை என்னவாக இருக்கும்.

திடீரென்று நம் குடும்ப உறுப்பினர் ஒருவர் சுவடுகள் எதுவுமின்றி காணாமல் போகிறார். எப்படி காணாமல் போனார் என்றே கண்டுப்பிடிக்க முடியவில்லை. அல்லது சாலையில் நடந்து செல்லும்போது நாம் ஒரு அமானுஷிய உருவத்தை பார்த்தால் அப்போது நம் மனநிலை எப்படி இருக்கும்.
நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்துள்ள Unsolved Mysteries எனும் இந்த ஆவணப்படம் இந்த மாதிரியான கதைகளைதான் தொகுத்துள்ளது. நிஜ வாழ்க்கையில் பலருக்கும் ஏற்பட்ட வித்தியாசமான பிரச்சனைகளை, அமானுஷ்ய விஷயங்களை அவர்களிடமே கேட்டு தொகுத்து இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பல காலங்களாக இந்த மர்மங்கள் எவற்றிற்கும் விடை காண முடியவில்லை என்பதால் இந்த சீரிஸிற்கு அன்சால்வ்டு மிஸ்டரிஸ் என பெயரிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.
ஏற்கனவே இரண்டு சீசன்கள் வந்த நிலையில் இதன் மூன்றாவது சீசன் வருகிற அக்டோபர் 18 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது.
தற்சமயம் இதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
