Latest News
எக்ஸ்ட்ரா ஒரு ரூபாய் கூட கொடுக்க முடியாது!.. அஜித் படம் குறித்து நெட்ஃப்ளிக்ஸ் அளித்த பதில்!..
Ajith Movie : கொரோனா பிரச்சனைக்கு பிறகுதான் நடிகர்களின் சம்பளம் மிக அதிகமாக உயர்ந்ததை பார்க்க முடியும். ஏனெனில் ஓ.டி.டி உரிமம் என்கிற ஒரு விஷயம் திரைப்படத்திற்கு வந்த பிறகு அதுவும் படத்தின் முக்கிய லாபமாக மாறியது.
அதனை தொடர்ந்து கதாநாயகர்கள் அதையும் கணக்கில் கொண்டு தங்களது சம்பளத்தை உயர்த்த துவங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் கால் பதிப்பதற்காக தொடர்ந்து தமிழில் நிறைய திரைப்படங்களை வாங்கி வருகிறது.
அந்த வகையில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை முன்பே வாங்கி இருந்தது. விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்தின் கதையை எழுதி வந்த காலத்திலேயே படத்தை வாங்கி விட்டது Netflix. அதன் பிறகு படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டு படத்தின் கதையும் மாற்றப்பட்டு வேறு விதமாக படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனை அடுத்து தயாரிப்பு குழு நெட்ஃப்ளிக்ஸிடம் பேசி இன்னும் கொஞ்சம் அதிக தொகை ஓடிடி உரிமத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் அதற்கு பதில் அளித்த netflix ஏற்கனவே எவ்வளவு தொகை பேசப்பட்டதோ அவ்வளவு பேசி படத்தை நாங்கள் வாங்கி விட்டோம் இனிமேல் இதை தாண்டி படத்திற்கு ஒரு ரூபாய் கூடுதலாக கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது netflix நிறுவனம். ஏற்கனவே அக்ரிமெண்ட் போடப்பட்டு விட்டதால் அந்த தொகைக்கு துணிவு படத்தை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் தயாரிப்பு குழு இருக்கிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்