இன்னும் எத்தன பேர் இருக்காங்கன்னு தெரியல! – பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய சீரியல் நடிகை

கடந்த ஒரு வார காலமாக ஏகப்பட்ட கலவரங்களை சந்தித்து வந்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. நிகழ்ச்சி துவங்கி ஒரு வாரத்திலேயே இவ்வளவு சண்டைகள் இதற்கு முன்பு நடந்ததில்லை என கூறப்படுகிறது. எனவே இந்த ஒரு வார அனுபவங்கள் நிறை மற்றும் குறைகள் குறித்து கடந்த சனி ஞாயிறுகளில் நடிகர் கமலுடன் பேசப்பட்டது.

பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை பேசிக்கொண்டனர். ஏற்கனவே பிக் பாஸில் இந்த முறை அதிகமான போட்டியாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை ஏற்கனவே 20 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் சீரியல் நடிகை மைனா நந்தினியை புதிய போட்டியாளாராக களம் இறக்கியுள்ளது பிக் பாஸ்.

இதுவரை 20 பேர் இருந்ததால் ஆளுக்கு ஐந்து பேர் என டீம் பிரித்துக்கொண்டு தங்களது பணிகளை செய்தனர். இப்போது மைனா நந்தினியும் வந்திருப்பதால் இனி டீம் பிரிப்பதில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

Refresh