Connect with us

வரலட்சுமிக்காக வாரி இறைக்கும் நிக்கோல்! என்னென்ன வாங்கி வெச்சிருக்கார் தெரியுமா?

Tamil Cinema News

வரலட்சுமிக்காக வாரி இறைக்கும் நிக்கோல்! என்னென்ன வாங்கி வெச்சிருக்கார் தெரியுமா?

Social Media Bar

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செலிபிரிட்டி திருமணம் என்றால் அது நடிகை வரலெட்சுமி – நிக்கோல் திருமணம்தான். நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

அதன்பின்னர் பாலாவின் தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்தவருக்கு அதன்பின்னர் ஹீரோயின் வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை. ஆனால் வில்லி கதாப்பாத்திரங்கள், துணை கதாப்பாத்திரங்கள் கிடைத்தன. அதையும் ஏற்று நடித்து சிறப்பான நடிகையாக தன்னை முன்னிறுத்தினார் வரலெட்சுமி.

நிக்கோல் என்பவரை வரலட்சுமி நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளியானது. அதை தொடர்ந்து திருமண ஏற்பாடுகளில் சரத்குமார் குடும்பமே பிஸியான நிலையில் கடந்த 3ம் தேதி வரலட்சுமி – நிக்கோல் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

தனது காதல் மனைவியை மகிழ்ச்சியில் ஆழ்த்த பல சர்ப்ரைஸ் பரிசுகளை கொடுத்து அசத்தி வருகிறாராம் நிக்கோல். காஸ்ட்லியான புடவைகள், தங்க, வைர நகைகள் மட்டுமல்லாமல் தங்கத்திலான செருப்பு உள்ளிட்டவற்றையும் அவர் பரிசாக வழங்கியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் காதல் ஜோடிகள் தற்போது மகிழ்ச்சியாக தங்கள் திருமண வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

To Top