Tamil Cinema News
ரஜினிக்கு மகாராஜா பட இயக்குனர் சொன்ன கதை.. கதையே நல்லா இருக்கே..!
நடிகர் ரஜினி லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு தொடர்ந்து புதிய இயக்குனர்கள் திரைப்படங்களில்தான் நடித்து வருகிறார். பெரிய இயக்குனர்கள் திரைப்படங்களை விடவும் இந்த புது இயக்குனர்களின் படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து வருகிறது.
கொஞ்ச நேரம் லிங்கா படத்தின் தோல்விகளுக்கு பிறகு ரஜினி திரும்ப சினிமாவில் பெரிதாக வரமாட்டார் என்று பலரும் பேசினர். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு கபாலி திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது.
அதனை தொடர்ந்து அவர் நடித்த காலா, பேட்ட, ஜெயிலர் போன்ற எல்லா படங்களுமே புதிய இயக்குனர்களின் இயக்கத்தில் உருவானது.
தற்சமயம் நடித்து வரும் கூலி திரைப்படமும் கூட தமிழ் சினிமாவில் தற்சமயம் கலக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் உருவாகி வருகிறது. இந்த நிலையில் மகாராஜா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நித்திலன் சாமிநாதன்.
இவர் ரஜினிகாந்திற்கு கதை சொல்லி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதை குறித்து சில விஷயங்கள் வெளியாகியிருக்கிறது. அவையும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
மகாராஜா திரைப்படத்தில் சொல்வது போலவே ஒரு சாமானிய மனிதனின் கதைதான் ரஜினிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் கதைப்படி ஒரு 55 வயது நபராக ரஜினிகாந்த் இருக்கிறார். சாதாரண மனிதராக வாழ்ந்து வரும் அவரது வாழ்க்கையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த நிலையில் தனது குடும்பத்தை காப்பாற்ற ரஜினிகாந்த் மேற்கொள்ளும் விஷயங்கள்தான் கதையாக இருக்கும். கிட்டத்தட்ட இந்த படம் பார்ப்பதற்கு பாபநாசம் திரைப்படம் போல இருக்கும். ஆனால் அதில் ரஜினிக்கு ஏற்ற சில கமர்சியல் விஷயங்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதே போலவே மக்கள் மத்தியில் இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த திரைப்படம்.
