எனக்கு சிவாஜி வேண்டாம்… அந்த நடிகர்தான் வேண்டும்!.. நடிகர் திலகத்தை திருப்பி அனுப்பிய என்.எஸ் கிருஷ்ணன்!..

Sivaji ganesan  and NS Krishnan : தமிழ்நாட்டில் சினிமா உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது நாடகங்கள்தான். சினிமா வளர்ந்து வந்த சமகாலத்தில் நாடகங்களும் தமிழ் நாட்டில் பிரபலமாக இருந்தன. இயக்குனர் கே பாலச்சந்தர், எம்.ஆர் ராதா போன்றவர்கள் அப்போதும் நாடக கம்பெனி வைத்து அதில் பல நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர்.

கே பாலச்சந்தர் எடுத்த நாடகம்தான் பின்னாலில் சர்வர் சுந்தரம் என்கிற திரைப்படமானது. அதிகபட்சம் நாடகங்களில் நடிப்பவர்களுக்கு இருக்கும் பெரும் ஆசையே எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் என்பதுதான்.

ஏனெனில் நாடகத்தைப் பொறுத்தவரை அந்த ஊரில் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் அவர்களை தெரியும். ஆனால் சினிமாவில் நடித்தால் மொத்த தமிழகத்திற்கும் அவர்களைத் தெரியும் என்பதால் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் செலுத்தி வந்தார் சிவாஜி கணேசன். என்.எஸ் கிருஷ்ணன் பிரபலமான நடிகராக இருந்த காலகட்டத்தில் சிவாஜி கணேசன் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார்.

kaka-radha-krishnan
kaka-radha-krishnan
Social Media Bar

அப்போது என்.எஸ் கிருஷ்ணன் தனது திரைப்படத்திற்கு ஆள் தேவை என்று தேடிக்கொண்டிருந்த பொழுது சிவாஜி கணேசனின் நாடகக் குழுவில் இருந்து காக்கா ராதாகிருஷ்ணனும், சிவாஜி கணேசனும் அனுப்பி வைக்கப்பட்டனர் அங்கு சென்ற பிறகு இருவரையும் பார்த்த என் எஸ் கிருஷ்ணன் அதில் காக்கா கிருஷ்ணனை தேர்ந்தெடுத்தார்.

காக்கா ராதாகிருஷ்ணன் ஒரு நல்ல காமெடி நடிகராவார் என் எஸ் கிருஷ்ணனும் காமெடி நடிகர் என்பதால்தான் அவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று மனதை தேற்றிக்கொண்டார் சிவாஜி கணேசன். ஆனால் பின்னாலில் என் எஸ் கிருஷ்ணனை விட அதிக புகழ் பெறும் நடிகராக மாறுவார் என்பதை அப்போது சிவாஜி கணேசன் அறிந்திருக்கவில்லை.