Cinema History
உனக்காக ஒண்ணும் பாட்டு பாட வரலை நான்!.. பாட்டு பாடாமல் சென்ற என்.எஸ் கிருஷ்ணன்!.. தயாரிப்பாளர் செஞ்சதுதான் சம்பவம்!.
எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் என்.எஸ் கிருஷ்ணன். திரைப்படங்களில் நடிக்கும் அதே நேரத்தில் சினிமாவில் பாடல்களும் பாடி வந்தார் என்.எஸ் கிருஷ்ணன்.
இந்த நிலையில் 1948 ஆம் ஆண்டு எஸ்.எஸ் வாசன் இயக்கி தயாரித்த திரைப்படம் சந்திரலேகா. இந்த படத்தில் ஒரு பாடலை பாடுவதற்காக என்.எஸ் கிருஷ்ணனை அவர் அழைத்திருந்தார். ஏனெனில் அப்போதைய காலக்கட்டங்களில் என்.எஸ் கிருஷ்ணன் பாடும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
எனவே பாடுவதற்கு வந்த என்.எஸ் கிருஷ்ணன் முதலில் அந்த பாடலை பாடினார். அதை கேட்ட எஸ்.எஸ் வாசனுக்கு அது அவ்வளவு திருப்தியாக இருப்பதாக தெரியவில்லை. எனவே மீண்டும் அந்த பாடலை பாடுமாறு அவர் என்.எஸ் கிருஷ்ணனை கேட்டுக்கொண்டார்.

என்.எஸ் கிருஷ்ணனும் மீண்டும் பாடினார். ஆனால் அப்போதும் எஸ்.எஸ் வாசனுக்கு அந்த பாடல் பிடிக்கவில்லை. இதனால் கடுப்பான என்.எஸ் கிருஷ்ணன் நான் உனக்கு ஒன்னும் பாட்டு பாடலை. மக்களுக்குதான் பாட்டு பாடுறேன் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனை பார்த்து அங்கிருந்த படக்குழுவே ஆடிப்போய்விட்டது. ஏனெனில் எஸ்.எஸ் வாசனை யாரும் முகத்துக்கு நேரே கடுமையாக பேசிவிட முடியாது. அந்த அளவிற்கு அவருக்கு சினிமாவில் செல்வாக்கு உண்டு. அவ்வளவு செல்வாக்கு இருந்தும் அந்த பாடலை மீண்டும் கேட்ட எஸ்.எஸ் வாசன் என்.எஸ் கிருஷ்ணனுக்கு போன் செய்தார்.
நீங்கள் சொன்னது சரிதான் இந்த பாடல் ரசிகர்களுக்கு பிடித்த பாடலாக இருக்கும் என கூறியிருக்கிறார்.
