Connect with us

நாயகன் வெளியானபோது நாயகனுக்கே டஃப் கொடுத்த ரஜினி படம் –  எது தெரியுமா?

Cinema History

நாயகன் வெளியானபோது நாயகனுக்கே டஃப் கொடுத்த ரஜினி படம் –  எது தெரியுமா?

Social Media Bar

கமல்ஹாசனின் சிறந்த திரைப்படங்கள் வரிசையில் நாயகன் திரைப்படத்திற்கு கண்டிப்பாக சிறப்பு இடம் இருக்கும். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக இருந்த திரைப்படம் நாயகன்.

மும்பையில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக எடுக்கப்பட்ட திரைப்படமாக நாயகன் திரைப்படம் இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருந்தார்.

இதனால் இப்போது உள்ள தலைமுறையினருக்கு கூட அலுப்பு ஏற்படுத்தாத வகையில் அந்த படத்தை எடுத்திருப்பார் மணிரத்னம். என்னதான் இப்போதைய தலைமுறையினர் வரை நாயகன் திரைப்படம் கொண்டாடப்பட்டாலும் அந்த படம் வெளியான காலத்தில் அந்த படத்திற்கு அந்த அளவிற்கு வரவேற்பு இல்லை என கூறப்படுகிறது.

இப்போது விஜய் அஜித் திரைப்படங்கள் தற்சமயம் ஒரே நாளில் வெளியாவது போலவே அப்போது ரஜினி, கமல் திரைப்படங்கள் ஒரே தேதியில் வெளியாகின.

அப்போது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 1987 ஆம் அன்று கமல் நடித்த நாயகன் மற்றும் ரஜினி நடித்த மனிதன் இரண்டு வெளியாகின.

ஆனால் நாயகனை விட மனிதன் திரைப்படமே அதிக வசூல் சாதனை படைத்தது. ஆனால் இப்போது உள்ள தலைமுறையினரில் நாயகன் திரைப்படம் அதிக மக்களுக்கு தெரிந்துள்ளது. ஆனால் மனிதன் படம் அவ்வளவு பிரபலமாக இல்லை.

Bigg Boss Update

To Top