Cinema History
என்ன கருமம்டா இது? பிரபல நடிகைக்கு ரசிகர் அனுப்பிய விநோத பரிசு!
இந்தியில் 90களில் இருந்து பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ரவீனா தண்டோன். பாலிவுட்டின் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ரவீனா தமிழிலும் அர்ஜூனுடன் சாது, கமல்ஹாசனுடன் ஆளவந்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கன்னட ஹீரோ யஷ் நடித்து வெளியான கேஜிஎப் சாப்டர் 2விலும் பிரதமராக நடித்திருந்தார். தற்போது ஒரு பேட்டியில் பேசிய ரவீனா தண்டோன் தனக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த தொந்தரவு குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் “நான் பிரபல நடிகையாக பல படங்களில் நடித்து வந்தபோது தினம்தோறும் என் வீட்டின் முன்னால் ரசிகர்கள் பலர் வந்து நின்று கொண்டே இருப்பார்கள். அதில் ஒருவர் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கினார்.
தினம்தோறும் அவர் என் வீட்டின் முன்னாலேயே நின்று கொண்டிருப்பார். சிலசமயம் தன் ரத்தத்தால் காதல் கடிதங்களை எழுதி எனக்கு அனுப்புவார். சில பரிசுகளையும் அனுப்புவார்.
ஒருமுறை அவரது நிர்வாண படங்களையும், வீடியோவையும் கூட கூரியரில் அனுப்பி வைத்தார். இதெற்கெல்லாம் நான் ரியாக்ட் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த அவர் ஒருமுறை நான் என் குடும்பத்தோடு காரில் சென்றபோது கல்லை எறிந்து தாக்கினார். பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அதை நினைத்தால் இப்போதும் பயமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
