Tamil Cinema News
இந்த மாதிரி ஆபாசமா பண்ண கூடாது.. வாலியின் பாடல் வரிகளால் கடுப்பான நடிகை..!
தமிழ் சினிமாவில் பல சமயங்களில் மோசமான பாடல் வரிகள் என்பது படங்களில் இடம் பெறுவதை பார்க்க முடியும். அந்த வகையில் கவிஞர் வாலிக்கூட நிறைய திரைப்படங்களில் இந்த மாதிரியான வரிகளை எழுதியுள்ளார்.
அவை அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானாலும் கூட படங்களுக்கு பாடல் வரிகளை எழுதும்போது வேறு வழியில்லை. அந்த பாடல்களுக்கு அப்படியான கருத்துக்கள் தேவைப்படுகின்றன. அதே போல எவ்வளவோ நல்ல பாடல்களுக்கு நல்ல நல்ல வரிகளையும் நான் தானே எழுதியுள்ளேன் என கூறுகிறார் வாலி.
அந்த வகையில் மகளிர் மட்டும் படத்தில் அவர் கறவை மாடு மூன்று காளை மாடு ஒன்னு என்கிற பாடல் வரி ஒன்றை எழுதியுள்ளார். அதனை பார்த்த நடிகை ஊர்வசி இந்த மாதிரி வரிகளை எல்லாம் நான் பாட முடியாது.
பெண்களை இழிவுப்படுத்தும் விதமாகவும் ஆபாசமாகவும் இந்த பாடல் வரிகள் உள்ளன என கூறியுள்ளார். அதற்கு பிறகு படத்தின் இயக்குனர் வந்து அந்த அர்த்தத்தில் பாடல் வரிகள் பயன்படுத்தப்படவில்லை என்று விளக்கம் கொடுத்தார்.
இந்த விஷயம் வாலி காதுகளுக்கு சென்றது. அதன் பிறகுதான் அவர் ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி என்கிற பாடலை எழுதினார். அது ஊர்வசிக்காகவே வாலி எழுதிய பாடலாகும்.