இந்த பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு மொழியிலுமே எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியானது. தமிழில் வெளியான படங்களில் கூட முன்னணி நடிகர்கள் என்று பெரிதாக யாரும் நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கில் அப்படியில்லை.
தெலுங்கில் வெளியான பெரும்பாலான படங்கள் அங்கு உள்ள டாப் நடிகர்கள் நடித்த படங்களாக இருக்கின்றன. நடிகர்களை விட நடிகைகள் தங்களுக்குள் அதிக கவர்ச்சி காட்டி போட்டி போட்டனர் என்றே கூற வேண்டும்.
தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் அதிக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் என்றாலும் கூட இந்த படத்திற்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் வெங்கடேஷ் நடித்த சங்கராந்தி வஸ்துனம் என்கிற திரைப்படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்திற்குமே கூட பெரிதாக வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.
அதில் போட்டியாக பாலகிருஷ்ணா நடித்த டாக்கு மகராஜ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்தார். இவர் ஏற்கனவே தமிழில் லெஜண்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரை பாலய்யா பின்னால் தட்டுவது போல் அமைந்த நடனம் ஏற்கனவே பிரபலமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் அந்த படம் இவரின் அதிக கவர்ச்சி காரணமாகவே ஹிட் கொடுத்துள்ளது. மூன்றே நாட்களில் 105 கோடி ரூபாய் ஹிட் கொடுத்துள்ளது இந்த படம். இதனை தொடர்ந்து அவருக்கு அடுத்த படங்களுக்கு 10 கோடி வரை சம்பளமாக கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம்.
ஒரே படத்தில் ஹிட் கொடுத்து நயன் தாராவின் சம்பளத்தை எட்டி பிடித்துள்ளாரே நடிகை ஊர்வசி ரவுத்தேலா என சினிமா வட்டாரத்தில் இது குறித்து பேச்சு இருந்து வருகிறது.








