கடைசில பிரபு மாதிரி என்ன கொடுமை இதுன்னு சொல்ல வச்சிட்டாங்க!.. நெட்டிசன்களால் மனம் வருந்தும் பி.வாசு!.
முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பி.வாசு கிட்டத்தட்ட வெகு காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து வருகிறார்.
இவர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு ரஜினி நடித்து வெளியான சந்திரமுகி திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் சந்திரமுகியின் இரண்டாவது பாகத்தை நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கியுள்ளார் பி.வாசு. இந்த திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று அவர் எண்ணினார்.
ஆனால் இந்த திரைப்படம் இரண்டு வகையான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. எனவே இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கும் பொழுது படத்தை பார்க்கும் எல்லோரும் இந்த படம் சந்திரமுகி முதல் பாகம் மாதிரியே இருக்கு என்று கூறுகிறார்கள்.
அப்புறம் இரண்டாம் பாகம் முதல் பக்கம் மாறிதான இருக்கும் அதையும் தாண்டி மற்ற திரைப்படங்களில் பேய்கள் என்பவை வேறு வேறு இடத்திலிருந்து வரும். உதாரணமாக லாரன்ஸ் திரைப்படங்களில் ஒரு கிரிக்கெட் மைதானத்தில் இருந்து பேயை வர வைக்க முடியும் அல்லது ஒரு ஆணியிலிருந்து கூட பேய் வர வைக்க முடியும்.
ஆனால் சந்திரமுகியை பொறுத்த வரை சந்திரமுகி யாரையும் தேடி வராது அது இருக்கும் அறைக்கு நாம்தான் சந்திரமுகியை தேடி செல்ல வேண்டும் அப்படி இருக்கும் பொழுது நான் அந்த அறையை மையப்படுத்தி தான் அடுத்த பாகத்தையும் கொண்டு போக முடியும். என்று கூறிய பி வாசு கடைசியில் என்னையும் பிரபு மாதிரியே என்ன கொடுமை சரவணன் இது என்று சொல்ல வைத்து விட்டார்கள் என்று கூறியுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்