Connect with us

ஒருவேளை சோறு சாப்பிட்டவன் கூட உன்ன விட நன்றியோட இருப்பான்!.. ரஜினியை கேலி செய்த பா.ரஞ்சித்!.. கடுப்பான தலைவர் ரசிகர்கள்!.

rajinikanth pa ranjith

News

ஒருவேளை சோறு சாப்பிட்டவன் கூட உன்ன விட நன்றியோட இருப்பான்!.. ரஜினியை கேலி செய்த பா.ரஞ்சித்!.. கடுப்பான தலைவர் ரசிகர்கள்!.

Social Media Bar

அட்டக்கத்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். அவரது முதல் படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அடுத்தடுத்து ரஞ்சித் இயக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார் பா.ரஞ்சித்.

அந்த சமயத்தில் ரஜினிகாந்திற்கும் தொடர்ந்து கோச்சடையான், லிங்கா என தோல்வி படங்களாக வந்துக்கொண்டிருந்தன. அந்த நிலையில் ரஜினிக்கு பெரும் வெற்றி படத்தை உருவாக்கி கொடுத்தார் பா.ரஞ்சித். அந்த வகையில் வெளியான கபாலி திரைப்படம் ரஜினி, பா.ரஞ்சித் இருவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது.

Pa-Ranjith-
Pa-Ranjith-

இந்த நிலையில் அதற்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து காலா என்கிற திரைப்படத்தை இயக்கினார் பா.ரஞ்சித். தற்சமயம் தங்கலான் என்கிற திரைப்படத்தை இவர் இயக்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு பேட்டியில் பேசும்போது அவரிடம் ரஜினிகாந்த் குறித்து முக்கியமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.

நீங்கள் இயக்கும் திரைப்படங்களில் என்ன அரசியல் பேசுகிறீர்கள் என அதில் நடிக்கும் ரஜினிக்கு கூட தெரியாமல் இருக்கிறதே எப்படி? என கேட்டனர். அதற்கு பா.ரஞ்சித் வாய்விட்டு சிரிக்க துவங்கிவிட்டார். இதனை பார்த்த ரஜினிகாந்தின் ரசிகர்கள் கோபமடைந்துவிட்டனர்.

ஒருவேளை டீ வாங்கி கொடுத்தவன் கூட உங்களை விட நன்றியோடு இருப்பான். இப்படி நன்றிக்கெட்ட தனமாக நடந்துக்கொள்ளலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top