Connect with us

ராமர் கோவில் பத்தி சூப்பர் ஸ்டாரே சொன்னாலும் ஏத்துக்க முடியாது!.. வெளிப்படையாக கூறிய இயக்குனர் பா.ரஞ்சித்!..

pa ranjith ramar temple

News

ராமர் கோவில் பத்தி சூப்பர் ஸ்டாரே சொன்னாலும் ஏத்துக்க முடியாது!.. வெளிப்படையாக கூறிய இயக்குனர் பா.ரஞ்சித்!..

Social Media Bar

Director Pa Ranjith : தமிழில் உள்ள இயக்குனர்களில் சமூக நீதி குறித்து பேசும் சில இயக்குனர்களில் பா ரஞ்சித்தும் ஒருவராக இருக்கிறார். அதே சமயம் பா.ரஞ்சித்தின் திரைப்படங்கள் கமர்சியலாகவும் நல்ல வெற்றியை பெறுவதால் சமூக அரசியலை பேசினாலும் கூட அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தற்சமயம் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படத்திற்குதான் தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எப்போதுமே அரசியல் சார்ந்த சமகால நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை ரஞ்சித் பதிவு செய்து வந்துள்ளார்.

எனவே ராமர் கோயில் கட்டி இருப்பது குறித்து ரஞ்ச்சித்திடம் கேட்கப்பட்டது ஏனெனில் அங்கு ஏற்கனவே இருந்த மசூதி இடிக்கப்பட்டு அங்குதான் கோவில் கட்டப்பட்டிருக்கிறது என்பதால் இதற்கு பா.ரஞ்சித்தின் பதில் என்னவாக இருக்கும் என அவரிடம் கேட்ட பொழுது மக்களின் பக்திக்காக இந்த கோவில் கட்டப்பட்டிருந்தால் அது நல்ல விஷயம் தான்.

ஆனால் அதில் அரசியல் சார்ந்த விஷயங்கள் இருக்கும்போது தான் அது விமர்சனத்திற்கு உள்ளாகிறது என்று கூறியிருந்தார். அப்பொழுது 500 வருட போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது என்று இது குறித்து ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என பா.ரஞ்சத்திரம் கேட்ட பொழுது ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் எத்தனையோ முறை ஏற்கனவே கூறி இருக்கிறார்.

அது ஒன்றும் இப்பொழுது புதிதாக அவர் கூறி இருக்கவில்லை என்றாலும் கூட அவர் கூறிய விஷயத்தில் எனக்கு விமர்சனம் உண்டு என்று கூறியிருக்கிறார் பா ரஞ்சித். 

Source: video Link

To Top