News
பா.ரஞ்சித், வெற்றிமாறனின் வளர்ச்சி சினிமாவின் தளர்ச்சி!.. ஆவேசமாக பேசிய பிரவீன் காந்திக்கு பதிலடி கொடுத்த வெற்றிமாறன்!.
தமிழில் அரசியல் பேசும் சினிமாக்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித். இவர்கள் திரைப்படமாக்கும் திரைப்படங்கள் குறித்து பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் இருவிதமான பேச்சுக்கள் இருந்தன.
ஒருப்பக்கம் இந்த திரைப்படங்கள் சமூக அரசியலை பேசும் திரைப்படங்கள் என கூறப்பட்டாலும் இன்னொரு பக்கம் சாதிய திரைப்படங்களைதான் இவர்கள் இயக்குகிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் ரஞ்சித் இயக்கத்தில் தற்சமயம் குழந்தை கேர் ஆஃப் கவுண்டம் பாளையம் என்கிற திரைப்படம் தயாராகியுள்ளது.

இதன் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பிரவீன் காந்தி ரஞ்சித், வெற்றிமாறன் மாதிரியான இயக்குனர்கள் வளர்ச்சி அடைந்ததால்தான் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்துவிட்டது. சினிமாவில் சாதியை சொல்பவன் சமுதாயத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன் என்பதுதான் என் கொள்கை என பேசியிருந்தார்.
இதுக்குறித்து வெற்றிமாறனிடம் கேட்கும்போது இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறை என்று சொல்கிறார்கள் அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று சொல்கிறார்கள் என்றால் அவர்கள் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை என்கிறார் வெற்றிமாறன்.
மேலும் சாதீய ரீதியான தாக்குதலுக்கு உள்ளான சின்னத்துரை என்னும் மாணவன் தேர்ச்சி அடைந்தது குறித்து கேட்டப்போது தன்னை தாக்கிய மாணவர்களுக்கு அவன் செய்த பதில் தாக்குதல்தான் இந்த தேர்ச்சி என்று கூறியுள்ளார் வெற்றிமாறன்.
