Connect with us

ரஞ்சித் சொல்லும் வரை அவங்களை மோசமா நினைச்சுட்டு இருந்தேன்.. மனம் திறந்த கார்த்தி!.

karthi2

News

ரஞ்சித் சொல்லும் வரை அவங்களை மோசமா நினைச்சுட்டு இருந்தேன்.. மனம் திறந்த கார்த்தி!.

Social Media Bar

Actor Karthi and Pa.Ranjith: தமிழ் திரைப்பட கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் கார்த்தி. தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் கார்த்தி தற்சமயம் தனது 25 ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியை பொறுத்தவரை பல்வேறு இயக்குனர்களுக்கு லக்கி ஹீரோவாக இவர் இருந்துள்ளார்.

கார்த்தி நடித்த திரைப்படங்களில் தீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், பருத்திவீரன் போன்ற திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்கள் ஆகும். இந்த திரைப்படங்கள் அனைத்துமே கார்த்தி வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் ஆகும்.

அதில் மெட்ராஸ் மிக முக்கியமான திரைப்படமாகும். பொதுவாக பெரும் நடிகர்கள் மிக அரிதாகவே வட சென்னை மக்களாக நடித்து வந்தனர். அந்த பிம்பத்தை மாற்றுவதற்காக பா.ரஞ்சித் நடிகர் கார்த்தியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

Actor Karthi in Madras Tamil Movie Stills

ஆனால் கார்த்தி ஆரம்பத்தில் காளி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அவருமே வட சென்னை மனிதர்கள் குறித்து தவறான பிம்பத்தையே கொண்டிருந்தார். இதுக்குறித்து கார்த்தி ஒரு பேட்டியில் கூறும்போது “நார்த் மெட்ராஸ் மனிதர்கள் குறித்த எனது பிம்பத்தை மாற்றியவர் பா.ரஞ்சித்.

நார்த் மெட்ராஸ் மக்களின் வாழ்க்கைமுறை, இசை, கலை என நாம் அறியாத பல விஷயங்களை மெட்ராஸ் படப்பிடிப்பில் ரஞ்சித் எனக்கு காட்டினார். சமூகநீதி என்னும் வார்த்தைக்கான அர்த்தமே ரஞ்சித் மூலமாகதான் எனக்கு தெரிந்தது” எனக்கூறியிருந்தார்.

To Top