ஆர்யா, ஜான்வி கபூர் கூட்டணியில் பையா இரண்டாம் பாகம்! – வெளிவந்த அரசல் புரசலான தகவல்கள்!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பையா. பருத்திவீரன் திரைப்படத்திற்கு கார்த்தி இந்த படத்தில் நடித்தார்.

Social Media Bar

அந்த கார்த்தியே இது என்ற வியப்பிலேயே பலரும் படத்திற்கு சென்றனர். ஒரு சிம்பிளான கதையை மக்கள் விரும்பும் வகையில் திரைப்படமாக்கியிருந்தனர்.

அந்த வகையில் அதன் இரண்டாம் பாகம் ஒன்று எடுக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் லிங்குசாமி. பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என வந்தால் முதல் பாகத்து கதையை எடுத்து அதில் சில மாற்றங்களை செய்து நட்சத்திரங்களை மட்டும் மாற்றி திரும்ப அப்படியே எடுப்பது வழக்கம். மற்றபடி முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்பந்தமே இருக்காது.

முனி, அரண்மனை போன்ற படங்கள் இப்படியாகதான் இருக்கும். இதில் பாகுபலி, எந்திரன் போன்ற சில படங்கள் விதி விலக்கு. இந்த முனி, அரண்மனை ரகத்தில்தான் பையா 2வும் வர உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், கதாநாயகியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இன்னும் எந்த அதிகார தகவல்களும் வரவில்லை. ஆனால் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.