Connect with us

என்னப்பா இப்படி ஏமாந்துட்ட!.தயாரிப்பாளர்களால் ஏமாந்த ரஜினிகாந்த்.. கண்டுப்பிடித்து உதவிய இயக்குனர்!.

Cinema History

என்னப்பா இப்படி ஏமாந்துட்ட!.தயாரிப்பாளர்களால் ஏமாந்த ரஜினிகாந்த்.. கண்டுப்பிடித்து உதவிய இயக்குனர்!.

Social Media Bar

தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் மிக குறைந்த சம்பளத்திற்கே ரஜினிகாந்த் நடித்து வந்தார். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் நடிக்கும்போது வெறும் 5000 ரூபாயைதான் சம்பளமாக வாங்கினாராம் ரஜினிகாந்த்.

ஆனால் அதற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கிய பிறகு அவரது மார்க்கெட் விரிவடைந்தது. இருந்தாலும் கூட நாட்டு நடப்பு அறியாமல் குறைவான சம்பளத்திற்கே நடித்து கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். இந்த நிலையில் 1978 இல் ப்ரியா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ரஜினிகாந்த்.

அந்த படத்தில் பிரபல இயக்குனர் திரைக்கதை ஆசிரியரான பஞ்சு அருணாச்சலம் திரைக்கதையில் பணிப்புரிந்து வந்தார். அப்போது ரஜினியை அழைத்து கதையை சொன்ன பஞ்சு அருணாச்சலம் படத்திற்காக எவ்வளவு சம்பளம் எதிர்பாக்குற என கேட்டுள்ளார்.

அதற்கு ரஜினிகாந்த் எல்லா படத்துக்கும் 30,000 ரூபாய் சம்பளமா வாங்குறேன். நீங்க வெளிநாட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்க ஒரு 15,000மாவது கொடுங்கள் என கேட்டுள்ளார். அதை கேட்ட பஞ்சு அருணாச்சலத்திற்கு அதிர்ச்சி தாங்கமுடியவில்லை.

யோவ் வெளில உன் மார்க்கெட் என்னன்னு தெரியுமா? உன் படம் எல்லாம் எப்படி ஓடிக்கிட்டு இருக்குன்னு தெரியுமா? இப்படி கம்மியா சம்பளம் வாங்குறியே என பேசியவர் அந்த ப்ரியா படத்திற்கு சம்பளமாக ரஜினிக்கு 1 லட்சத்து 10,000 ரூபாயை கொடுத்துள்ளார்.

அதற்கு பிறகுதான் ரஜினியின் சம்பளம் 1 லட்சத்துக்கு உயர்ந்துள்ளது. இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

To Top