தயாரிப்பு நிறுவனமே நினைச்சாலும் பேரை தடை செய்ய முடியாது.. பராசக்தி திரைப்பட டைட்டிலில் புது ட்விஸ்ட்.!
பராசக்தி என்கிற பட டைட்டில் யாருக்கு என்கிற பிரச்சனைதான் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக பேச்சாக இருந்து வருகிறது. எந்த ஒரு நடிகரின் முதல் படத்தின் பெயரை கேட்டாலும் யாருக்கும் அவ்வளவாக தெரியாது. ஆனால் சிவாஜி கணேசன் என்று சொன்னவுடனேயே பலரும் பராசக்தி என கூறுவதை பார்க்க முடியும்.
அப்படியாக நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு ஒரு அடையாளமாக அமைந்த திரைப்படம்தான் பராசக்தி. எனவே இதுவரையில் எந்த ஒரு நடிகரும் அந்த டைட்டிலை தங்களது திரைப்படங்களுக்கு வைக்க துணியவில்லை.
இந்த நிலையில் தற்சமயம் விஜய் ஆண்டனியும் சிவகார்த்திகேயனும் அந்த டைட்டிலுக்காக போராடி வருகின்றனர். இதுக்குறித்து பராசக்தி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான நேஷனல் பிக்சர்ஸ் கூறும்போது நாங்கள் பராசக்தி படத்தை டிஜிட்டலில் மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
எனவே அதன் டைட்டிலை யாருக்கும் தருவதாக இல்லை என கூறிவிட்டனர். இதுக்குறித்து சினிமா வட்டாரத்தினர் கூறும்போது ஒரு டைட்டில் தயாரிப்பாளருக்கு 10 ஆண்டுகளுக்குதான் சொந்தம். அதற்கு பிறகு யார் வேண்டுமானாலும் அந்த டைட்டிலில் படம் பண்ணலாம்.
இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த அமரன், வேலைக்காரன், மாவீரன் போன்ற பல படங்களுக்கு பழைய படங்களின் பெயர்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றிற்கெல்லாம் இந்த மாதிரியான அனுமதிகள் வாங்கப்படவில்லை என கூறுகின்றனர். எனவே தயாரிப்பு நிறுவனமே நினைத்தாலும் பட பெயரை மறுபடி பயன்படுத்துவதை தடுக்க முடியாது என ஒரு பேச்சு இருந்து வருகிறது.