News
தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது!.. தளபதி வெளியிட்ட பாடல்.. மற்ற அரசியல் பாட்டை எல்லாம் ஓரம் தள்ளிடுச்சி..
தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்ததுடன், பாடலையும் அறிமுகம் செய்திருக்கிறார்.
இந்நிலையில் பல கட்சித் தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், கட்சியின் கொடி மற்றும் பாடலை தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் மக்களும் தேட தொடங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் அவரின் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடல்
தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்பாடலில் தொடக்கத்தில் “மக்களை கொடுமைப்படுத்தும் ஒரு யானையின் மீது அமர்ந்துள்ள ஒரு நபரை இரு யானைகள் எதிர்த்து மக்களை காப்பாற்றுவது போலவும், வறட்சியான இடத்தில் வாகை மலர் மலர்ந்துள்ளது போன்றும், மேலும் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு காளையை தொடக்கத்தில் காட்டுவது என இந்தப் பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது”

பாடலின் தொடக்கத்தில் “தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது” எனத் தொடங்குகிறது. தமிழக மக்களுக்காக அவர்களை மனதில் வைத்து அவர்களின் நலனுக்காக ஒரு தலைவன் வரப் போகிறான் என்றும்.. அதுபோன்ற ஒரு தலைவனை தான் மக்களும் வரவேற்க காத்திருக்கிறார்கள் எனவும் பாடல் குறிப்பிடுகிறது.
மேலும் சினிமாவில் தான் ஒரு சிகரத்தை அடைந்த பிறகும் என்னை அந்த இடத்தில் கொண்டு சேர்த்த மக்களுக்கு நன்றி காட்டும் விதமாக அவர்களுக்கு சேவை செய்ய விஜய் இறங்கி வரப்போகிறார் என்பதை குறிக்கும் வரிகளும் இடம்பெற்று இருக்கிறது.
இந்நிலையில் “கறை இல்லாத கைய புடிச்சு போகப் போறோமே” எனும் வரி ஒரு நல்ல தலைவனின் பின்னால் மக்கள் நன்றாக வாழப் போகிறார்கள் என்பதை குறிக்கும் வரிகளும் இடம்பெற்று இருக்கிறது.
இந்நிலையில் “தமிழன் கொடி, தர்மம் கொடி, வீரக் கொடி, விஜய் கொடி, ஆதிக்குடியை காக்கும் குடி ” என தமிழக மக்களை வைத்து பாடல் இயற்றப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வீடியோவில் வீட்டில் கேலண்டர் முதல் பூ விற்கும் பாட்டியின் கடை வரை தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. அடுத்து வரும் பாடலின் வரிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்று இருக்கும் யானை மற்றும் வாகை மலரை பற்றி கூறியிருக்கிறார்கள்.

கட்சியில் இடம்பெற்று இருக்கும் “சிவப்பு கலர் தமிழன் நரம்பில் ஓடும் ரத்தத்தின் நிறம் என்றும், இரு யானையின் பலம், தமிழ் உணர்வை உருவி கொடி அமைத்திருக்கிறோம் என அதில் கூறப்படுகிறது ” மஞ்சள் வண்ணத்தை எடுத்து கொடியில் அலங்கரித்து இருக்கிறோம் எனவும், இக்கொடியைக் காக்க சிங்கம் ஒன்று வரப்போவதாகவும் அவருக்கு பறை அடிக்கிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரசனை கேள்வி கேட்கும் தளபதியின் காலம் இது எனவும், அன்றைக்கே கூறினோம் “இது ஆளப்போறான் தமிழன் ” எனக் குறிப்பிட்டு உள்ளார்கள். இந்நிலையில் தான் இவரின் மெர்சல் படத்தில் “ஆளப்போறான் தமிழன் என்னும் பாடலை முன்னதாகவே கூறி இருக்கிறோம் ” என இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
சமூக வலைதளங்களில் கருத்துக்கள்
இதை சமூக வலைத்தளங்களில் பார்த்த ரசிகர்களும், மக்களின் தமிழ் சினிமாவில் கூட இவ்வாறு பாடல் அமைந்தது இல்லை எனவும், பலரும் அவர்களின் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். ஒரு சிலர் இப்பாடலை கேட்கும் போது நமக்குள் புரட்சி எழுகிறது எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் மற்ற கட்சியின் பாடல்களை விட தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடல் நன்றாக உள்ளதாகவும் கருத்துக்கள் பதிவு செய்து வருகிறார்கள்.
