எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆவார் பல வருடத்திற்கு முன்பே கணித்த பட்டுக்கோட்டையார்!. முதலமைச்சர் ஆனதும் எம்.ஜி.ஆர் செய்த நன்றிகடன்!.
சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தி பாடல் எழுதுவதில் வல்லவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சினிமா உலகம் பட்டுக்கோட்டையார் என செல்லமாக அவரை அழைக்கும். பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரனார் எம்.ஜி.ஆருக்கு ஏகப்பட்ட பாடல்களை எழுதி கொடுத்துள்ளார்.
எம்,ஜி.ஆர் நடிக்கும் படங்களில் வரும் கருத்து பாடல்கள் எல்லாமே அவர் எழுதியதுதான், 29 வயது வரைக்குமே வாழ்ந்த அவர் சினிமாவில் ஐந்து ஆண்டு காலம் மட்டுமே இருந்தார்.
ஆனால் அந்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய பாடல்களால் உறுதியான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். அவர் எம்.ஜி.ஆர் இயக்கத்தில் வெளிவந்த நாடோடி மன்னன் படத்தில் அவர் முதல்வர் ஆவார் என உறுதியாக சொல்லியிருந்தார்.
அப்பொழுது எம்.ஜி.ஆர் கட்சிக்கூட துவக்கவில்லை கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கதரிசியாக அதை சொல்லியிருந்தார் பட்டுக்கோட்டையார். எம்.ஜி.ஆருக்கு அருமையான பாடல்களை கொடுத்த பட்டுக்கோட்டையார் ஒரு நாள் திடீரென்று இறந்துவிட்டார்.
அவரை சிறப்பிக்கும் விதமாக தன்னுடைய முதல்வர் நாற்காலியில் இருக்கும் நான்கு கால்களில் மூன்று கால்கள் யார் என்று எனக்குத் தெரியாது ஆனால் ஒரு கால் மட்டும் பட்டுக்கோட்டையார் கல்யாண சுந்தரத்தின் கால் என்று எம்.ஜி.ஆர் குறிப்பிட்டார். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர் உயரத்தை தொட பட்டுக்கோட்டையார் உதவியிருந்தார்.
