Cinema History
அவமாரியாதை செய்த தயாரிப்பாளரை ஆட்டம் காண வைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!.. அந்த ஒரு வாக்கியம்தான் காரணம்!.
இளம் வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு வந்து குறைந்த காலங்களிலேயே பெரும் உயரத்தை தொட்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஒரு கவிஞராக அவரது திறனை கண்டு கவிஞர் கண்ணதாசன் வரை பலரும் மிரண்டு போயுள்ளனர் என்றே கூற வேண்டும்.
பொதுவாக கவிஞர் கண்ணதாசன் அவ்வளவு எளிதாக யாரையும் புகழ்ந்து பேசிவிட மாட்டார். அவரது காலத்திலேயே சிறப்பாக பாடல் வரிகளை எழுதி வந்த வாலியை புகழ்ந்து பேசியது கிடையாது. அப்படியிருக்கும்போது கண்ணதாசனே புகழ்ந்து பேசியிருக்கிறார் என்றால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எப்படிப்பட்டவராக இருப்பார் என அறிய வேண்டும்.
இந்த நிலையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படுவதை பொறுத்துக்கொள்ள மாட்டார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1955 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்கிற திரைப்படத்தில்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு முதன் முதலாக வாய்ப்பு கிடைத்தது.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனரை பொறுத்தவரை அவரது அலுவலகத்தில் அவர் அமர மட்டுமே எப்போதும் நாற்காலி இருக்கும். அவரை பார்ப்பவர்கள் வருவதற்கு அவர் நாற்காலி போட மாட்டார்.
அவர்கள் நின்றுக்கொண்டேதான் அவரிடம் பேச வேண்டும். இதில் கலைஞர் மு கருணாநிதி மட்டும் விதிவிலக்கு. அவருக்கு மட்டுமே நாற்காலி போடப்படும். இந்த நிலையில் ஒரு நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை சந்திப்பதற்காக வர சொல்லியிருந்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர்.
அங்கு அவரை பார்க்க சென்ற கல்யாணசுந்தரம் அங்கு நாற்காலி இல்லாமல் இருப்பதை பார்த்தார். உடனே ஒரு பேப்பரை எடுத்து ஒரு வாசகத்தை எழுதி மாடர்ன் தியேட்டர் நிறுவனரிடம் கொடுத்தார். அதில் மரியாதை கொடுத்து மரியாதை வாங்க பழகி கொள்ளுங்கள் என எழுதியிருந்தது. அதை படித்ததும் உதவியாளரை அழைத்து கல்யாணசுந்தரத்திற்கு நாற்காலியை போட்டார் மாடர்ன் தியேட்டர் நிறுவனர்.
முதல் படம்தான் என்றாலும் கூட தயாரிப்பாளர் தனக்கு உண்டான மரியாதையை அளிக்க வேண்டும் என நினைத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்