Tamil Cinema News
நடிகை பவித்ரா லெட்சுமியின் மோசமான நிலை.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. இதுதான் காரணமாம்..!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அதிக பிரபலமடைந்தவர் நடிகை பவித்ரா லெட்சுமி. பவித்ரா லெட்சுமி ஓ.கே கண்மணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படத்தில் நடித்த பிறகும் கூட அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் என எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது பலருக்கும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த விதத்தில் நடிகை பவித்ராவிற்கும் இது அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
முக்கியமாக புகழுக்கும் பவித்ராவுக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி அந்த நிகழ்ச்சியில் நல்லப்படியாக ஒர்க் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து பவித்ரா லெட்சுமி அதிக பிரபலமடைந்தார். மேலும் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.
நடிகர் சதீஸ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர் திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் பவித்ரா தொடர்ந்து தமிழில் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக சில காலங்களாக பவித்ராவை தமிழ் சினிமாவில் காணவில்லை. இந்நிலையில் பல காலங்களுக்கு பிறகு அவர் ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். அதுக்குறித்த ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
அதில் பவித்ரா மிகவும் உடல் இளைத்து காணப்பட்டார். இது ரசிகர்கள் பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகை பவித்ராவே இதற்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும்போது சிறிது காலங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை.
அதனால்தான் நான் இப்படி இருக்கிறேன். சீக்கிரமே சரியாகிவிடுவேன் என கூறியுள்ளார் பவித்ரா.
