இசையில் விஜய் ஆண்டனிக்கு இருக்கும் ஞானம் இளையராஜாவுக்கு கிடையாது!.. கம்பேர் செய்யும் நெட்டிசன்கள்!.

இசையமைப்பாளர்களில் அதிக பிரபலமானவர் என்றால் அது இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள்தான். அன்னக்கிளி திரைப்படத்தில் துவங்கி இளையராஜா தொட்டதெல்லாம் வெற்றிதான் என கூற வேண்டும்.

அவரது இசைக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தாலும் கூட நிஜ வாழ்க்கையில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாக கூடியவர் இளையராஜா. அவரது பேச்சுக்கள் பல மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர் மேடைகளில் தோன்றும்போது பலமுறை நடிகர் பார்த்திபன் அவரை கிண்டல் செய்திருக்கிறார்.

இப்படிதான் ஒருமுறை அவர் இளையராஜாவை பாடல் பாடுமாரு கூறி அவர் கையில் கித்தாரை கொடுப்பார். அப்போது இளையராஜா மியூசிக் போடுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? முதலில் உனக்கு இசையை பற்றி என்ன தெரியும் என கேட்பார். அந்த வீடியோவையும் விஜய் ஆண்டனியின் வீடியோவையும் கம்பேர் செய்து காட்டுகின்றனர் நெட்டிசன்கள்.

ilayaraja
ilayaraja
Social Media Bar

அந்த வீடியோவில் விஜய் ஆண்டனி பேட்டி எடுப்பவர்களிடம் பேசும்போது இசையமைப்பது எளிமையான விஷயம்தான் யார் வேண்டுமானாலும் இசையமைப்பாளர் ஆகலாம். இமயமலையை தொட நினைக்கும் ஒருவர் அதற்காக செய்யும் சின்ன முயற்சிகள் கூட பாரட்டப்பட கூடியவைதானே.  அப்படிதான் இசையும் என்கிறார் விஜய் ஆண்டனி.

இசையை குறித்து விஜய் ஆண்டனிக்கு இருக்கும் இந்த ஞானம் இளையராஜாவிற்கு இல்லாமல் போய்விட்டதே என்கின்றனர் நெட்டிசன்கள்.