Cinema History
எக்கச்சக்கமான ஆட்களை என் இயக்கத்தில் சேர்த்த எம்.ஆர் ராதாவின் நாடகம்!.. பெரியாரே புகழ்ந்த அந்த நாடகம் எது தெரியுமா?
MR Radha : சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நாடகத்துறையில் பெரும் உயரத்தை தொட்டியிருந்தார் நடிகர் எம்.ஆர் ராதா. சொல்லப்போனால் அவர் சினிமாவில் நடித்த பல திரைப்படங்கள் ஏற்கனவே அவர் நாடகமாக போட்ட கதைகள்தான்.
அப்படி அவர் நாடகமாக போட்டு நாடகமாகவும் பெரும் வெற்றியை கொடுத்து திரைப்படமாகவும் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் ரத்தக்கண்ணீர். ரத்தக்கண்ணீர் எம்.ஆர் ராதாவின் ஒரு அடையாளம் என்று கூறலாம்.
அதேபோல நிறைய நாடகங்களை எம்.ஆர் ராதா போட்டு இருக்கிறார். அவை யாவுமே ஏதாவது ஒரு சமூக கருத்தை பேசும் விதமாகவும் அரசியலைப் பேசும் விதமாகவும் இருந்ததால் அரசியல் தலைவர்களே அதிகபட்சம் எம் ஆர் ராதாவின் நாடகங்களை பார்ப்பதற்கு விருப்பப்பட்டனர்.
இந்த நிலையில் தான் எம்.ஆர் ராதா போர்வாள் என்கிற ஒரு நாடகத்தை வெளியிட்டார். இந்த நாடகம் பெரும் புரட்சிகரமான ஒரு நாடகமாக இருந்தது. முக்கியமாக திராவிட கொள்கையை வெகுவாக பேசும் விதமாக இந்த நாடகம் அமைந்திருந்தது.
இதனால் இந்த நாடகம் தமிழ்நாட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொதுவாகவே எம்.ஆர் ராதாவின் நாடகங்கள் சில இப்படி தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. இதே போல ஒரு ராமாயணம் நாடகத்தில் ராமனை விமர்சித்து நாடகத்தை தயார் செய்திருப்பார்.
அதுவும் கூட அப்பொழுது அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் இந்த போர்வாள் நாடகத்தின் மூலமாக பலர் திராவிட இயக்கங்களில் சென்று சேர துவங்கினர். ஒருமுறை பெரியார் எம்.ஆர் ராதாவிடம் கூறும் பொழுது உன்னுடைய அந்த ஒரு நாடகத்தை பார்த்து எக்கச்சக்கமான நபர்கள் நம்முடைய கழகத்தில் இணைந்தனர் என்று கூறி அதற்கு நன்றியும் கூறி இருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்