Connect with us

என் தங்கச்சி உயிரை காப்பாத்துனவரு முருகன்!.. அன்னைக்கு எழுதின பாட்டு அது!.. வாலி வாழ்க்கையில் நடந்த அதிசயம்!..

vaali murugan

Cinema History

என் தங்கச்சி உயிரை காப்பாத்துனவரு முருகன்!.. அன்னைக்கு எழுதின பாட்டு அது!.. வாலி வாழ்க்கையில் நடந்த அதிசயம்!..

Social Media Bar

Poet Vaali :  இந்து மதத்தை பொறுத்தவரை அதில் வைணவம் சைவம் என்று இரண்டு வகை உண்டு. வைணவத்தை பின்பற்றுபவர்கள் பெருமாள் மற்றும் பெருமாளின் துணை தெய்வங்களை வழிபடுவார்கள் ஆனால் அவர்கள் சிவன் தொடர்பான தெய்வங்களை வழிபட மாட்டார்கள் ஆனால் கவிஞர் வாலியைப் பொறுத்தவரை அவர் வைணவராக இருந்தாலும் கூட முருகனின் மிகப்பெரும் பக்தனாக இருந்தார்.

முருகன் பாடல்கள் பலவற்றிற்கும் அவர் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார் மற்ற வைணவர்கள் போல நாமம் இடாமல் அதிகபட்சம் பட்டை இட்டுக்கொண்டுதான் இருப்பார். ஏன் இப்படியான ஒரு தெய்வ பக்தி அவருக்கு வந்தது என்பது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் கூறும்போது அவரது தங்கைக்கு இளம் வயதில் ஒரு மோசமான வியாதி வந்ததாம். அப்பொழுது அந்த வியாதிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் இனி அவரை காப்பாற்ற முடியாது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டாராம். அந்த சமயத்தில் நண்பர்கள் கூறியதற்காக முருகனை வேண்டிக்கொண்டார் வாலி.

அப்போது அவருக்கு வேறு ஒரு மருத்துவரிடம் பழக்கம் கிடைக்க அந்த மருத்துவர் வந்து சில ஊசிகளை போட்டு மாத்திரை எழுதி கொடுத்து சென்று இருக்கிறார். அடுத்த சில நாட்களில் அவரது தங்கை குணமாகிவிட்டார். அந்த மருத்துவரின் பெயர் சுப்பிரமணி. சுப்பிரமணி என்பது முருகனின் மற்றொரு பெயராகும்.

எனவே முருகனே வந்து தனது தங்கையை காப்பாற்றியதாக நினைத்துள்ளார் வாலி. அதே சமயத்தில் முருகனின் பாடலுக்கு பாடல் வரி எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்க கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் என்கிற பாடலை எழுதியிருக்கிறார் வாலி இந்த நிகழ்வை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top