Cinema History
உங்க நடிப்பு நல்லா இல்ல!.. எம்.ஜி.ஆரை கடுபேத்திய வாலி.. ட்ரிக்காக படக்குழு செய்த வேலை!..
Actor MGR and Poet Vaali திரைத் துறையில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தாலும் கூட எம்ஜிஆர் அனைவரிடமும் நன்றாக பழகக்கூடிய ஒருவராக இருந்தார். இதனால் அவருக்கு நட்பு வட்டாரமும் கொஞ்சம் பெரிதாகவே இருந்தது. அப்படியே அவரிடம் நெருங்கி பழகக் கூடிய நண்பர்களில் முக்கியமானவராக கவிஞர் வாலி இருந்தார்.
அவருக்கு என்ன தோன்றினாலும் எம்.ஜி.ஆரின் முகத்துக்கு முன்பே சொல்லக்கூடியவராக வாலி இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் படப்பிடிப்பிற்கு வாலி வந்த பொழுது முக்கியமான ஒரு காட்சி படம் பிடிக்கப்பட்டு கொண்டிருந்தது. அந்த காட்சியின்படி கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருப்பார் கதாநாயகி.

அவர் தலையில் இருக்கும் மல்லிகைப் பூவை எடுத்து உண்ண வேண்டும் எம்.ஜி.ஆர். அந்த காட்சியை படம்பிடித்து கொண்டிருந்தனர் படக் குழுவினர் ஆனால் அதில் வாலிக்கு ஏற்பில்லை. பொதுவாக இயக்குனர்கள் கூட எம்.ஜி.ஆரிடம் குறை சொல்வதற்கு பயப்படுவார்கள் ஏனெனில் எம்.ஜி.ஆர் கோபப்பட்டு விட்டல்ள் தொடர்ந்து படத்தை நடிக்க மாட்டார்.
ஆனால் வாலி எந்த யோசனையும் இல்லாமல் இந்த காட்சியை நீங்கள் சரியாக நடிக்கவில்லை நீங்கள் இன்னமும் அதிகமாக மல்லிகை பூவை உண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனை கேட்டதும் எம்.ஜி.ஆர்க்கு கடுமையான கோபம் வந்துவிட்டது.

மல்லிகை பூ எவ்வளவு கசப்பாக இருக்கும் என்று தெரியுமா அவ்வளவு பூவெல்லாம் சாப்பிட முடியாது என்று கூறிவிட்டு கோபமாக சென்றுவிட்டார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. பிறகு படக்குழு வாலியிடம் எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்தும் படி கூறினர்.
பிறகு யோசித்த வாலி எம்.ஜி.ஆரிடம் சென்று அதிக பூவை நீங்கள் உண்டால்தான் அந்த காட்சிக்கு சரியாக இருக்கும். எனவே மல்லிகை பூவிற்கு பதிலாக ரோஜா பூவை மாற்றி விடுங்கள். அது இந்த அளவு கசக்காது என்று கூறியிருக்கிறார் பிறகு யோசித்த எம்.ஜி.ஆருக்கும் வாலி சொன்னது சரி என்று பட்டது அதன்படியே பிறகு காட்சி மாற்றி அமைக்கப்பட்டது.
