Cinema History
அப்பா இறந்த பிறகு ஸ்ரீ ரங்கத்தில் பிச்சை எடுத்துட்டு இருந்தேன்!.. சினிமாவிற்கு முன் வாலி அனுபவித்த கொடுமைகள்!..
சினிமாவைப் பொறுத்தவரை அதில் பிரபலங்கள் கோடி கோடியாக சம்பாதிப்பது மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் அந்த இடத்தை பிடிப்பதற்கு அவர்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளமாக இருக்கும்.
உதாரணமாக நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் போன்றோர் மிகவும் கீழ்த்தட்ட நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்து தற்சமயம் பெரும் உயரத்தை தொட்டுள்ளனர். இதில் பல பிரபலங்களும் அடங்குவர். அப்படியாக கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் கவிஞராக பார்க்கப்பட்டவர் கவிஞர் வாலி.
பாடல் வரிகளை எழுதுவதில் மிகவும் வல்லவரான அவர் பழைய கால சினிமாவில் துவங்கி அஜித் விஜய் காலகட்டம் வரையில் சினிமாவிற்கு பாடல் வரிகளை எழுதி வந்தார். ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பெரும் போராட்டத்தை சந்தித்துள்ளார் கவிஞர் வாலி.
கவிஞர் வாலி சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கிய காலகட்டத்தில் அவரது தந்தை இறந்து விட்டார். தந்தை இறந்த பிறகு குடும்ப கஷ்டம் காரணமாக அவரது வீட்டார் ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மும்பைக்கு சென்று விட்டனர். ஆனால் வாலி வாய்ப்பு தேடி வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்ததால் மும்பைக்கு செல்லாமல் சென்னையிலேயே வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார்.
ஆனால் சென்னையில் தங்கும் அளவிற்கு கூட வாலியிடம் காசு இருக்க வில்லை எனவே அவர் தன்னுடைய வீட்டு வாசலிலேயே தினமும் தூங்கி இருக்கிறார். ஏனெனில் அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தெருவில் இருந்தவர்களிடம் உதவி கேட்டு சாப்பிட்டு வந்திருக்கிறார்.
இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது கிட்டத்தட்ட ஸ்ரீரங்கத்தில் பிச்சை எடுத்துக் கொண்டுதான் அப்பொழுது சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன் எனக் கூறியுள்ளார். அவ்வளவு கஷ்டங்களை பட்டுதான் சினிமாவில் நல்ல இடத்தை பிடித்தார் கவிஞர் வாலி.
